பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

உலகிலே தங்களுக்குரிய வீடுகளை விற்பவர்களை பொருள்களை விற்பவர்களைக் கண்டிருக்கிறோம். அவற்றை அவர்கள் வறுமையால் விற்கிறார்கள். அல்லது, வேறு காரணங்களால் விற்கிறார்கள். ஆனால், பொன்போலப் போற்றி வளர்த்த சரீரத்தை விலை கூறுபவர் யார்? அவர்தான்் உத்தியோகத்தார்'

'ஒரு சாண் வயிறு காரணமாக எண்சாண் உடலை ஆளவந்தார்க்கு நாமும் அடிமைப் படுத்தினோமே. அந்த அடிமை முறி கிழிந்தது; நாமும் பணியிலே இருந்து விடுதலை பெற்றோம்; அதனால் சிறை நீங்கினோம் என்று வேதநாயகர் தனது முன்சிஃப் வேலையை விட்டு விலகியபோது, விளக்கம் கூறி மகிழ்ந்தார்.

இதே கருத்தை அவர் பாமாலையாக்கிய போது, கீழ்க் கண்டவாறு பாடுகிறார்.

"வீடு நிலங்கள் பொருளை விற்பார் இந்த மதினியில் நீடும் எண் சாண் மெய்யை ஓர் சாண் உதரம் நிமித்தம் விற்று நாடும் அரசர்க் கடிமை என்றே முன்பு நாம் கொடுத்த ஏடு கிழிபட்ட தன்றோ உத்தியோகம் இழந்ததுவே. தடை நீங்கின உத்தியோகத்தைக் கைவிட்ட தன்மை யினால், சிறை நீங்கினம் பலதீயர்க் குள்ளாகிச் சிறுமையுறும் குறை நீங்கினம்; துட்டர் கூட்டமும் நீங்கினம்; கூடுந்துன்பப் பொறை நீங்கினம்; நங்கறை நீங்கினம்; மகிழ்பூண் நெஞ்சமே.

பணியிலே இருந்து ஓய்வு பெற்றதால், வேதநாயகம் மிகவும் மகிழ்ச்சி பெற்றார். பணிச் சாலை கடும்பாலை; அதிலே அகப்படுபவர்கள் கரும்பைப் போலப் பிழியப்படுகிறார்கள். ஆதலின், போதும், போதும் உத்தியோகக் கனமே என்று