உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 37

ஒதுங்கிவிட்டார். அந்த எக்களிப்பை அவர் திரிபுடை தாளத்திலே அமைத்துப் புன்னாகவராளியிலே இசையாகப் பாடினார். அவற்றிலே சில வரிகள்:

'போதும் போதும் உத்தியோக கணமே - இதில்

ஏது சுகம் நமக்கு மனமே. எந்தநேரமும் ஓயாவேலை - இதில்

என்ன பெற்றோம் முத்து மாலை; அந்த உத்தியோகமும் ஆலை - அதில்

அகப்பட்ட நாம் கரும்பு போலே போதும் பணிசெய்து கொண்டிருந்த நேரத்திலும், அவர் மனம் ஒய்வை நாடித்தவித்தது. உலகமோசடிகளையும், பொய் புரட்டுக்களையும் ஆராய்ந்து சலித்த அவர் மனம் அமைதியைத் தேடியது. ஆதலின் ஏங்குகிறார் அவர்.

"அப்பா இதென்ன அதிகாரம் - ஐயோ எப்போதும் பக்திசெய்ய இல்லையே நேரம்

-என்கிறார்! ஏனென்றால், “சுப்பையரோ அபத்த மூட்டை - அந்தச்

சுந்தரையர் வழக்கிலே தொள்ளாயிரம் ஓட்டை, அப்பையர் கற்பிப்பார் பொய்ச் சீட்டை - அந்த

அனந்தையர் கட்டுவார் ஆகாசக் கோட்டை அண்டப் புரட்டன் அந்த வாதி - அகி

லாண்டப் புரட்டன் அப்பா அவர் பிரதிவாதி, சண்டைப் பிரசண்டன் நியாயவாதி - நாளும்

சாஸ்திரப் புளுகன் கட்சிக்காரன் எனும் வியாதி.