உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 49

தவிர, சாதி பேதங்களும், அந்தஸ்துகளும் மனிதர்களுடைய கற்பனைகளே. பிறந்தபோதோ எல்லாரும் சமானம், மானிடர் அனைவரும் சகோதரரே எண்ணிக்கை இல்லாத அநேகருடைய தேகப் பிரயாசையால் நமக்குச் சகல பாக்கியங்களும் கிடைக்கின்றன. அவர்களை நாம் பெரிய உபகாரியாகவே கருதவேண்டும். அவர்கள் உழைப்பின்றேல் உலக வாழ்வில்லை.

யாருக்கும் அகம்பாவம் கூடாது. அதுவும் அதிகாரிகளுக்கு அது அறவே கூடாது. ஏனென்றால், மக்களுடைய நன்மைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இருக்கிறார்கள். மக்களுடைய சம்பளங்களையே அவர்கள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். எனவே, அவர்கள் மக்களுக்கு ஊழியக்காரர்களே அல்லாமல் எசமானர்கள் அல்லர். இப்படிநினைக்காமல், மக்களைத் தங்களுக்கு அடிமைகள் என்று எண்ணுகிற அதிகாரிகள் அக்கிரமக் காரர்களே ஆவர்.