உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இலஞ்சத்தை ஒழிக்க அரசுக்கு யோசனைகள்

ந்ேத ஆட்சியோ அது முடியரசோ அல்லது குடியரசோ, அது எந்த அரசு ஆனாலும், அது பொதுவுடைமையோ அல்லது தனியுடைமையோ எதுவானாலும் சரி, அரசியலை நிர்வாகம் செய்பவர் அதிகாரிகளே.

'அரசு மாறும் - அரசியல் கொள்கை மாறும். ஆனால், அதிகாரிகள் மாற மாட்டார்கள். இதைத்தான்் அதிகாரவர்க்கம் 3.REAUCRACY என்பர் அரசியல் ஞானிகள்.

சன நாயக ஆட்சியிலே சட்ட சபைக்குத்தான்் முதலிடம். அது இயற்றும் சட்டங்களை நடத்தி வைக்கும் பொறுப்பு அறமன்றகளையும் UDiCARY செயற் குழுவையும் EXECUTIVE யும் சேர்ந்தது.

நமது வாழ்க்கையை வரையறை செய்துவிருப்பு வெறுப்புக் களைக் கட்டுப்படுத்தி, உரிமைகளைப் பாதுகாத்து, நம்மை ஆள்வது சட்டங்களே ஆதாவது RULE OF LAW என்பதை எல்லோருமே அறிவார்கள். சட்டசபையிலே பிறந்த சட்டங்களைப் போலவே, அவ்வப்போது அதிகாரிகள் பிறப்பிக்கும் விதிகளையும் அதாவது RULE OF REGULATIONS களையும் மதித்து நடப்பது தவிர்க்க முடியாததாகிறது. சிற்சில சமயங்களில் இவர்களே நீதி வழங்குபவராகவும் இருப்பது அவசியமாகிறது.