பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 5}

எனவே, ஆட்சி முறையில் அதிகாரிகளுக்கு அளிக்கப் பட்டிருக்கிற முதன்மையையும். முக்கியத்துவத்தையும் நாம் குறைக்க முடியாது.குறைக்கவும் கூடாது. இவர்கள் பொதுவூழியர் எனப்படுவர்.

இந்தப் பொதுநல ஊழியம் அதாவது PUBLIC SERVACE என்பது போருழியம் அதாவது MILITARY SERVICE என்றும், அமைதியூழியம் CIVIL SERViCE என்றும் இருவகையாகப் பிரிக்கலாம்.

ஒவ்வொன்றிலும் எத்தனை எத்தனையோ கிளைகள், கொப்புகள், விளார்கள் என்று எண்ணற்றவை உள்ளன. இவ்வாறு, பலவகைப்பட்ட அரசியல் ஊழியர்கள், அரசுப் பணியாளர் அல்லது துரைத்தனத்தார் எனப்படுவர்.

நல்லாட்சிக்கு இவர்கள் நடத்தையிலே நாணயம் வேண்டும். ஒழுக்கத்திலே உண்மை ஒம்பப்பட வேண்டும். எண்ணத்திலும் செயலிலும் நேர்மை, நியாயம் வேண்டும். அரசியலின் எஃகச் சட்டம் இவர்கள் தான்ே!

ஒரு நாட்டின் முதுகெலும்பும் இவர்களே. ஆதலால், தொண்டர் தம் பெருமை சொல்ல ஒண்ணாதது. என்றது இந்தப் ப்ொதுநல ஊழியர்களுக்கே சரியாகப் பெர்ருந்தக் கூடிய்து.

இந்த ஊழியத் தாபனம் இந்த நாட்டிலே உருவானது சென்ற நூற்றாண்டிலேதான்்.அதனால், இதற்குநூற்றாண்டுக்காலவளர்ச்சி உண்டு. இந்தத் தாபனம் தனது கடமையில் சிறிதளவு தவறுமானால் கூட, பொறுப்பை உணராது போனாலும், எத்தகைய அக்கிரமக் கேடுகள் விளையும் என்பதை இதன் ஆரம்பக் காலத்திலேயே வேதநாயகம் உணர்ந்தார் அது செழிந்தோங்கி வளர்ந்து மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்பினார்