பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ஆகையால், தமது அறிவுரைகளால் வேதநாயர் அதனை வளர்க்க முயன்றார். உத்தியோகத்தர் - அதிகாரிகள் அல்லர்: அவர்கள் ஊழியர்; அவர்களுக்கு அடக்கம் அவசியம் என்றார் அதிகார மமதையைப் போலவே லஞ்சப் பழக்கத்தையும் வேத நாயகர் வெறுத்தார். அந்த வெறுப்பின் எதிரொலியினாலே வெளிவந்த பாட்டு இது.

"வாங்குவீர் பரிதான்ம் - உமைவிட்டு நீங்குமோ அவமானம்'

-என்று. அதை வன்மையாகக் கண்டித்து,வேதநாயகர் இகழ்ந்தார். அதற்குரிய அவரது வாதம் என்ன என்று நீங்கள் கேட்கக் கூடும். அதனால், அவரது வார்த்தைகளிலேயே அவர் எழுதிய தமிழ் நடையிலேயே விபரத்தைப் படியுங்கள். ஒழுக்கமா? திறமையா?

a--

கடவுளைப் போல அசரனுக்குச் சருவலோக சஞ்சாரமும் சருவ சக்தியும் இல்லை. ஆதலின், உத்தியோகத்தர் மூலமாகவே அவன், அரசாங்கத்தை நடத்த வேண்டி இருக்கிறது. உத்தியோகத்தர்கள் ராசப் பிரதிநிதிகள் அவர்கள் மிகவும் மேலானவர்களாய் இருக்க வேண்டும். திறமையும், நல்லொழுக்கமும் உள்ளவர்களையே தேடி, அவர்களுக்குத் தகுந்த உத்தியோகங்களைக் கொடுக்க வேண்டும். வேலைபார்க்கும் திறமையிலே அதிமேதாவியாய் இருந்தாலும், ஒழுக்கக் கேடன் ஆயின், சிறு பதவியும் அவனுக்குக் கொடுக்கக் கூடாது. யோக்யர்களையே தேடிப், பதவிகளிலே அமர்த்தினால், உலகிலே தகுதி அதிகரிக்கும்.

யோக்யதையைக் குறித்த யாதொரு பரீட்சையையும் செய்யாமல், கல்வியிலே யார் தேர்ந்து வருகிறார்களோ அவர்களுக்கே உத்தியோகம் கொடுக்கப்படுகிறது. கல்விப்