உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பணத்திற்காக வழக்காடுபவன் நல்ல வழக்கறிஞனல்ல

2.உலகத்திலே உள்ள ஒவ்வொரு நாடுகளிலும், வணிகம், வர்த்தகம், கொடுக்கல் வாங்கல் பணத் தொடர்புகள், ஒருவருக்கும் - மற்றவர்களுக்கும் உள்ள உடன்பாடுகள், உரிமைகள், சொத்து விவகாரங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றைப் பற்றி எண்ணற்ற சட்ட திட்டி ஒழுங்கும் விதிகளும் ஒழுங்கீனங்களும், நீதிகளும் அநீதிகளும் மக்கள் வாழ்க்கையிலே குறுக்கிடுகின்றன.

அந்த மனித இடர்ப்பாடுகளை ஒவ்வொரு மனிதனும் அறிந்து நீதிமன்றங்களிலே வழக்குகளைத் தொகுத்து வாதாட முடியாது - இயலாது. எனவே, சட்டம் படித்த, தெரிந்த தெரியாத பாமரர்களுக்கு. உதவியாக, வாதாடிட எல்லா நாடுகளிலும் வழக்கறிஞர்கள் தோன்றியுள்ளார்கள்.

வழக்குரைஞர்கள், துன்பமடைந்த பாமர மக்களுக்கு, படிப்பறிவில்லாத ஏழைகளுக்கு பாதுகாவலர்கள் சொத்து சுகம் இழந்தவர்களுக்கு உதவி புரிபவர்கள். எனவே, அப்படிப்பட்ட வழக்குரைஞர்கள் சகல கலா பண்டிதர்களாக பல்கலை வித்தகர் களாக, பல்துறை விற்பன்னர்களாக, வழக்கு சம்பந்தமான சகல சட்ட திட்டங்களையும், சாஸ்திர சரித்திரங்களையும், நாட்டு நடப்புக்களையும் நன்றாகத் தெரிந்தவர்களாக, எல்லாம் புரிந்தவர்களாக, நன்றாக வாதாடிடும் வல்லமையாளர்களாகவும், நாவன்மையோடு, யூக, வியூகங்கள் தெரிந்த நுட்பமான