உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 59

சிந்தனையாளர்களாகவும், சமய சந்தர்ப்பப் பேச்சுகளுக்குப் பதில் பேசும் சாதுர்ய முடையவர்காளவும், பன் மொழிப் புலமை யாளர்களாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான்் வழக்குகளுக்குள்ளே ஊடுருவிப் பார்க்கும் சட்ட, சம்பிரதாய, சமுதாய, அரசியல், பொருளாதார ஞானக் கண்களைப் பெற்றவர்களாகத் திகழ முடியும். அப்படிப்பட்ட வழக்குரைஞர்கள் தான்் வழக்கறிஞர்களாக வரமுடியும், அவர்களை நம்பி வழக்குத் தொடுத்தவர்களுக்கு நம்பிக்கையைத் தரும்.

'ஒரு வழக்கை வக்கீல் ஏற்பதற்கு முன்னம் அதை அவர் நன்றாய்ப் பரிசோதித்து, நியாய வழக்காகத் தோன்றினால் மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அநியாய வழக்குகளை அங்கீகரிக்கக் கூடாது.'

ஒருவன் கொலைகாரன் என்று தெரிந்த பிறகு, அவன் கொலை புரியவில்லை என்று வக்கீல் வாதிப்பது தெய்வ சம்மதாகுமா? அவர் மனச் சாட்சிக்குத் தான்் அது பொருந்துமா?

'ஒருவன் திருடன் என்று தன்மனசுக்குத் தெரிந்திருக்க, அவன் திருடவே இல்லையென்று சலஞ்சாதிப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்?

'பொய்ப் பத்திரம் என்று தெளிவாய்த் தெரிந்த ஒன்றை, உண்மை என்று நிலை நாட்டினால், அதைச் சிருட்டித்தவனுக்கும். வக்கீலுக்கும் என்ன பேதம் இருக்கிறது?

'வழக்காளி மனதறியப் பொய்யாதரவை உண்டு பண்ணினான். அதை மெய்யென்று வக்கீலும் சாதித்தால், இருவரும் குற்றம் புரிந்தவர்களே

'சந்தேக வழக்குகளை வக்கீல் ஏற்று அதை நடத்தத் தடை இல்லை; ஏனென்றால் உண்மையைக் கண்டுபிடிப்பது கோர்ட்டா