பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ {} மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ருடைய கடமை, அன்றியும், ஒரு வழக்கு பொய் என்று நிலை பெறுகிற வரையிலும், அதனை மெய் என்றே கருதுவதுதான்் இயல்பு.

'ஆனால் சிலர், வழக்கின் தன்மையை யோசியாமல், வந்த வழக்கு எந்த வழக்கானாலும், உடனே அதை ஏற்றுத்தங்களது மனச் சான்றுக்கு மாறாகக் கறுப்பை வெள்ளை என்றும், வெள்ளையைக் கறுப்பென்றும் வாதிக்கிறார்கள். இவர்களுக்கு நியாய வாதிகள் என்ற பெயர் பொருந்துமா?

'ஒரு வழக்கை ஏற்கும் போது, அதன் உண்மை தெரியாமலிருந்து, பிறகு எப்போது தெரிந்தாலும் - அப்போது அதனைத் தள்ளிவிட வேண்டும். அதன் பின்பு, எதிர்க் கட்சியை ஏற்றுக் கொள்வது முறை அல்ல. பொய் வழக்காடி, நட்டப்படாத படி கட்சிக்காரனுக்குப் புத்தி போதிப்பதும், வழக்குகளை சமாதான்ப் படுத்தி வைப்பது வழக்கறிஞர் கடமை.

'தீய வக்கீல், கட்சிக்காரனைக் கண்டதும், 'உன்னுடைய அதிட்டந்தான்். உன்னை என்னிடத்திலே கொண்டுவந்து விட்டது. என்னிடத்திலே எப்போது வந்தாயோ அப்போதை உன்னுடைய காரியம் எல்லாம் அனுகூலந்தான்். 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். எதிரியைத் தலை காட்டாதபடி மடக்குகிறேன். அவன் "லா LAW மேலே போனால், நான் "ஈக்குட்டி" மேலே போவேன். அறநூலை அவன் ஆதாரங் காட்டினால், ஆங்கில லாவைக் கொண்டு வெல்லுவேன்; பிரெஞ்சு லாவை அவன் பிரயோகித்தால், செர்மன் லாவை நான் விடுவேன். செர்மன் லா வால் அவன் என்னை அடித்தால், ரோமன் லா வால் நான் அடிப்பேன்." என்று, மெய்யாகவே போருக்குப் புறப்படுபவன் போல, வீரசல்லாபங் கூறுகிறார். இவ்வாறு ஒரு வழக்கறிஞன் ஒரு கட்சிக்காரனை ஏமாற்றுவது தருமமா?"