உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி § {

'வியாச்சியத் தன்மையையும் தமது பிரயாசையையும். கட்சிக்காரன் தகுதியையும் யோசித்து நியாயமான ஃபீசைவக்கீல் பெறவேண்டுமே அன்றி அதிகம் கேட்பது முறை அல்ல. கட்சிக் காரன் தோற்றால் அவன் கொடுத்த பீசுகளும், செய்த செலவுகளும்

வென்றாலோ, கிரமமான செலவு மட்டும் அவனுக்கு எதிரியினால் கிடைக்குமே அன்றி, அதிகமாகக் கொடுத்த ஃபீசு கிடைக்காது. வழிச்செலவு, படிச்செலவு, வாய்தாதோறும் ஃபீசு - இப்படி வழக்கு விசாரணையாகிற ஒவ்வொரு கட்டத்திலும் வக்கீலுக்குப் புதிது புதிதாகக் காணிக்கை கொடுத்து, கட்சிக்காரன் பிச்சைக்காரன் ஆகின்றான். துன்பப்படுகிறவர்களுக்குத் துணை புரிவது எல்லாருக்கும் கடமை அல்லவா?

'உதவிக்கு மாறாக, அட்டைபோல அவர்களை உறிஞ்சுகிறார் களாம் சில வழக்கறிஞர் - சில தேவதைகள் அடிக்கடி பலிகேட்பது போல; இவர்கள் ஃபீசு கேட்கிறார்களாம். இது தருமந்தான்ா? -என்று. மாயூரம் முன்சிஃபாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வேத நாயகம் பிள்ளை கேட்கிறார்.

அக்கிரமம்! அக்கிரமம்!!

'சிலர், பல சில்லாக்களிலே வழக்குகளை வாங்கிப் பூமியை வலம் வருகிறார்கள். காலையிலே காசி; மத்தியானம் மதுரை: அந்தியிலே அயோத்தி, ஆசையே சிறகாகப் பட்சி போலப் பறந்து திரிகிறார்கள். இந்த விசுவ சஞ்சாரிகளிடம் வியாச்சியங்களைக் கொடுப்பதைக் காட்டிலும் சகல தஸ்தா வேசுகளையும் அக்கினிக்குத் தத்தம் செய்து விடுவது நல்லது.'

'ஒரு கோர்ட்டு அல்லது ஊரை விட்டு மற்றொரு கோர்ட்டு அல்லது ஊருக்குப் போகிற வக்கீல் தனக்காக வேறொரு வக்கீலை