உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ஆஜராகும்படி நியமித்துப் போவது வழக்கம். இது யாரால், எக்காலத்தில் ஏற்பட்டது என்பது ஒருவருக்கும் தெரியாது."

வழக்கைத் தான்ே நடத்துவதாகக் கட்சிக் காரனிடம் ஒப்புக் கொண்டு. உடன்படிக்கைக்குமாறாக அந்த வக்கீல் வேறொருவரை எப்படி நியமிக்கக் கூடும்? நியமனம் பெற்ற வக்கீலுக்கோ வழக்கை நடத்த மனமில்லாததால், நேரம் இல்லாததால், விவரம் தெரியாததால், அனேக வழக்குகள் அதோகதி ஆகின்றன.

'ஒருவருக்காக மற்றவர் ஆஜராகிய வழக்கம், அக்கிரமத்திலே பிறந்தது. அக்கிரமத்திலே வளர்ந்து, அக்கிரமத்திலே நிலை பெற்றிருக்கிறது.'

வக்கீல் தனக்குள்ள சாவகாசத்தையும், சக்தியையும் அறிந்து மிதமாக வியாச்சியங்களை ஏற்கவேண்டுமே அன்றி, பொருளா சையால் பல ஊர்களிலும் பல கோர்ட்டுகளிலும் அளவற்ற வழக்குகளை ஏற்று. எதையும் கவனிக்க நேரமின்றி அவதிப் படக்

ஏற்றுக் கொண்ட வழக்குகளின் சாராமிசங்களையும், சகல சங்கதிகளையும் கவனித்து அதற்குரிய சட்டங்களையும், சரித்திரங்களையும் மேற்கோர்ட்டார் சித்தாந்தங்களையும், எதிர்க் கட்சியின் பலக் குறைவையும் எடுத்துக் காட்டி சபைக் கூச்சமின்றி, வாசக தாட்டியாகவும், சமயரஞ்சித மாகவும் வாதிக்க வேண்டும்.'

'நடந்த காரியங்களை விவாதித்து விவரிக்க வேண்டுமே அன்றி, புதிய சங்கதிகளைச் சிருட்டிப்பது, கட்சிக்காரனுக்குச் சாட்சித் திட்டம் செய்து கொடுப்பது அறவே கூடாது இது என்ன வாதமோ!

'சில வக்கீல்கள் எதை நியாயம் என்று ஒரு வழக்கில் வாதிக்கிறார்களோ, அதையே அநியாயம் என்று வேறொன்றில்