உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 63

வாதிக்கிறார்கள்', 'பிள்ளை மைனரானபோது சொத்துக்களைத் தகப்பன் விரயஞ் செய்யக் கூடாது என்று வாதிக்கிறார்; அவரே, அன்றே, அதே கோர்ட்டில் விசாரனையாகும் வேறொரு வழக்கில் மைனர்க்குரிய சொத்துக்களைத் தகப்பன் விரயஞ்செய்தால், அதை எக்காலத்தும் பிள்ளை ஆட்சேபிக்கக் கூடாது என்கிறார்

'இவ்வாறு, சமயத்துக்குத் தகுந்த வாறு வழக்குக்கு வழக்கு முன்பின் முரணாக வக்கீல் செய்யும் வாதம் -துர்வாதம் அல்லவா? வியாச்சியரீதிக்குத் தக்கபடி வெவ்வேறு விதமாக வாதிப்பது சிரமமே - என்றாலும் ஒரே வகை வழக்குகளில் விரோதமாக வாதிப்பது விபரீதம் அல்லவா? தமிழிலே வாதித்தால் தவறு என்ன?

தமிழகக் கோர்ட்டுகளிலே தமிழ் வக்கீல் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள். தேச மொழியும் தமிழ்: கோர்ட்டிலே வழங்குகின்ற மொழியும் தமிழ் நியாயாதிபதியும் தமிழர் வாதிக்கிற வக்கீலும் தமிழர் கட்சிக்காரர் தமிழர்.

‘எல்லாம் தமிழ் மயமாயிருக்க, யாருக்குப் பிரீதியாக அவர்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை. நியாயாதிபதி அல்லது வக்கீல் ஆங்கிலராய் இருந்தால், ஆங்கிலத்திலே வாதிப்பது நியாயம். தமிழ் நியாயாதிபதி முன் தமிழ் வக்கீல் ஆங்கிலத்திலே வர்திப்பது ஆச்சரியமல்லவா?

ஆங்கில அதிகாரிகள் கூட தேச மொழியிலே பரீட்டையில் தேறவேண்டும் என்று சட்டம் ஏற்பட்டிருக்கிறது. அப்படியிருக்க, தமிழ் வக்கீல்கள் தாய் மொழியைத் தள்ளி விட்டு அந்நிய மொழியிலே வாதிப்பது அசந்தர்ப்பம் அல்லவா?

'தமிழ் நன்றாகத் தங்களுக்குப் பேசவராது என்று கெளரவம் போலச் சொல்லிக் கொள்கிறார்கள். இதனினும் இழிவு வேறொன்று மில்லை."