பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி §7

ஆறுமுகநாவலர்சிதம்பரம்நகரிலே பாடசாலைநிறுவி, தமிழை வளர்த்து வருகிறார். மீனாட்சி சுந்தரம் பிள்ளை நடமாடும் புத்தகசாலையாய்த் திரிந்து, தமது செலவிலே அனைவர்க்கும் தமிழை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்.

இவ்விருவருடன் மாயவரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளையையும் எண்ணி, இவர்களைத் தமிழின் மும்மூர்த்திகள் என்று சொல்லலாம்.

ஆறுமுக நாவலர் ஒரு பெரும் புலவர் தமிழ் வசனத்தை அவர் வளர்த்தார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒரு வித்துவான். அதுவும் மகா வித்துவான் குன்றுகளைப் போல பல்லாயிரம் கவிதைகளை ஒவ்வொரு பெயரிலே பாடிக் குவித்துக் காட்டியவர். ஆனால், வேதநாயகம் பிள்ளை ஒரு பல்கலை விற்பன்னர்; நீதி பதியாக நின்று அறமயமான தீர்ப்புக்களை வழக்கிய நேர்மையான பண்பாளர், சிறந்த கவிஞர், அரிய பண்டிதர் பெரிய புலவர் சிறந்த கவைவாணர் உரைநடையிலே தமிழ் உலகுக்கு நாவல் என்ற புதினத்தை முதன் முதலாக எழுதிவழங்கியவர். இவரது உரைகள் தமிழ் உலகுக்கு வழிகாட்டி, இவருடைய கவித்திறத்தைப் பார்க்க வேண்டுமா? இதோ, மகாவித்துவான். மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் கவியாற்றலை வேதநாயகர் வியந்து பாடும் பாடல்

'வித்தகமார் மீனாட்சி சுந்தரவேளை ஒரு நூல்

விளம்பும் என்னைப் புத்தமுதார் நின் வாக்கால் துதித்தனை நீ பாடியது

இப் பொருள் நூல் ஒன்றோ எத்தனையோ கோவைகள் மற் றெத்தனையே புராணம்

இன்னும் எண்ணில் நூல்கள் அத்தனையும் இத்தனை என்று எத்தனைநா இருந்தாலும்

அறையப் போமோ?