உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ஒருநூல் என்று பாடலின் முதல் வரியிலே வேதநாயகர் குறிப்பிட்டது. 1859 ஆம் ஆண்டில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய நீதி நூல் என்ற அற்புதத் தமிழ் நூலை ஆகும். மகாவித்வானுடன் வேதநாயகர்:

திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதி மன்றத்திலே மொழி பெயர்ப் பாளராக வேதநாயகம் பிள்ளை பணியாற்றிய போது, மலைக் கோட்டை கட்டளைத் தம்பிரான் ஒருவர். தருமபுர ஆதினத் தலைவரால் நியமிக்கப்பட்டார்; அவர் தனது மேலிடத்துக்குக் கீழ்ப் படிந்து நடக்காமல், ஆதினத்து நிர்வாகத்துக்கு விரோதமாக நடந்து வந்தார். அதனால், ஆதினம் அவர்மீது வழக்குத் தொடுத்திட ஆவன செய்துவந்தது.

இந்த வழக்கை நடத்தும் பொறுப்பை ஆதினம் மகா வித்வானிடம் ஒப்படைத்தது. திருச்சிதாயுமானவர் கோயிலிலே தருமபுரம் ஆதீனத்துக்குள்ள உரிமையை வலியுறுத்தி விவகாரங் களை ஆங்கிலத்திலே எழுதி, அதை நீதி மன்றத்தாரிடம் கொடுக்க வேண்டும். -

அந்த நேரத்திலே அந்த வழக்கு விவரங்களை எல்லாம் ஆங்கிலத்திலே எழுத, வேதநாயகம் பிள்ளையை விட்டு விட்டால் வேறுயாரும் தகுதியானவர் இல்லை. அதன் காரணமாக, மகாவித்துவான், வேதநாயகம் பிள்ளையின் உதவியை நாடிச் செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.

அதே நேரத்தில், ஆதினத்தின் எதிர்க்கட்சியினரும், அதே எண்ணத்துடன் வேதநாயகம் பிள்ளை வீட்டருகே திரளாகத் திரண்டிருந்தார்கள். இதனைக் கண்ட் மகாவித்துவான், வேறோர் இடத்திலே இருந்து, தாம் வேதநாயகரைக் காணவந்த