உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 6%

விவகாரத்தை ஒரு கவிதையின் மூலம் வேத நாயகருக்குத் தெரிவித்தார்.

'கடவுள் காரியம் சம்பந்தப்பட்ட எனது கட்சியே நியாயமானது. எதிர்க் கட்சியார் அநியாயக் காரர். வேதநாயகமோ மெய்யே உருவானவர் கார்மேகம் கைம்மாறு கருதுவதில்லை, என்ற கருத்தமைந்த மகாவித்துவான் எழுதிய அந்தக் கவிதையைப் படியுங்கள்.

"மையேறுங் கண்ணி யொருபாகன் காரியம்

மற்றிதுதான்் பொய்யே அல: முகிற் கேது.கைம்மாறு:

பொறையினொடு மெய்யே உருக்கொள் புகழ் வேதநாயக

வித்தகன் தன் கையே! உன்னைப் புகழ்வேன்; புகல்வேறிலை

கண்டு கொள்ளே

-என்று, மகாவித்வான் எழுதிய கவிதையை வேதநாயகர் படித்ததும் உடல் சிலிர்த்து, மகாவித்வானை வரவேற்று, எதிர்க் கட்சியார் வேண்டுகோளைப் புறக்கணித்தார். தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் மகாவித்வான் பணியை நிறைவேற்றி முடித்து, பிறகு நீதி மன்றத்திலே வழக்குத் தொடுக்கப் பட்டு, தருமையாதீனத் தலைமை சார்பிலே நியாயப்படி உரிமையை நிலை நாட்டிட மகாவித்வானுக்குப் பேருதவியாக நின்றார்.

இதனால், வேதநாயகர் மீது மகாவித்வானுக்கும், மகாவித்வான் மேல் வேதநாயகருக்கும், இவ்விரண்டு பேர்கள் மீது தருமை யாதீனத் தலைவரான மகா சந்நிதான்த்துக்கும் இடையே நெருக்கமான நட்பு வளர்ந்தோங்கியது. பொன்னும் பொருளும்