பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயவரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை ஒரு பல்கலை வித்தகர் வரலாற்றுப் புதினம் புனைவதில் வல்லுநர்கள் என்று புகழ் பெற்ற பேராசிரியர்கள் கல்கி, சாண்டில்யன் ஆகியோருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்

சட்டத் துறையைத் தமிழ்ப் படுத்துவதில், சட்டத் துறைப் பேராசிரியர் மா. சண்முக சுப்பிரமணியத்திற்கும், அனந்த நாராயணனுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

பெண்ணின் பெருமையைப் போற்றியதில், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாருக்கும், இந்திய சுதந்திர விடுதலை வித்தகரான அண்ணல் காந்தியடிகளுக்கும் முன்னுதாரணமாக வழிகாட்டியவர் வேதநாயகம் பிள்ளை.

'தமிழ்த் தாயின்தாள்மீது கால் வைப்போன் தலைமீது, என் கால் வைப்பேன் என்று வீர முழக்கமிட்டதமிழ்மொழிச்சுதந்திரப் போர் வீரர் நாவலர் எஸ்.எஸ். சோமசுந்தரப் பாரதியாருக்கும், தமிழைப் பழிப்பவனை என்தாய் தடுத்தாலும் விடேன்' என்று மொழிப் போர் வீரராய் விளங்கிய பாவேந்தர் பாரதிதாசனாருக்கும் முன் மாதிரியாகத் திகழ்ந்தவர் வேதநாயகம் பிள்ளை.

இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழிக்கு ஒரு புதிய பாணி மறுமலர்ச்சியை உருவாக்கி, அதை நாடெங்கும் பரப்பிய பேரறிஞர் அண்ணாவுக்கும், தமிழ் இசை வளர்ச்சியில் தன்னேரிலா பற்றாளராக விளங்கி அரும்வாடுபட்ட ராஜா சர் அண்ணாமலை செட்டியார் உணர்ச்சிக்கும் வித்தாக விளங்கியவர் வேதநாகயம் பிள்ளை.

ஆன்மிக சமய வளர்ச்சியில், சைவ சித்தாந்த சண்ட மாருதம் என்ற விருது பெற்ற ஆன்மிக வித்தகர் சோமசுந்தரநாயக்கருக்கும், சித்திரை மாதத்துச் செல்வம் போலக் கோடை இடி முழக்கமிட்டு ஆன்மிக வாதமிடும் ஞானியார் அடிகளுக்கும் ஆன்மீக