பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 7

ஆணிவேராக ஆழப் பதிந்து நின்றவர் மாயூரம் வேதநாயம் பிள்ளை.

நகைச் சுவை நாயகமாய் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்கச் செய்த திருக்குறளார் முனிசாமிக்கும், திரை உலகில் பகுத்தறிவைச் சிரிப்போடு சிரிப்பாகப் பேசி நடித்து சிந்திக்க வைத்த கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணனுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர் வேதநாயகம் பிள்ளை.

கவிதைகளை அல்லது பாடல்களை எளிய தமிழில் எழுதி மக்கள் மனதிலே பதிய வைக்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து புகழ்பெற்றவர்களான மக்கள் கவி சுப்பிரமணிய பாரதியாருக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஆதாரச் சான்றாக நின்று வழிகாட்டியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

தனது நீதிமன்றத்துக்கு வரும் சிக்கலான வழக்குகளில், நேர்மையான - நியாயமான - எவர் மனதும் புண்படாத, மனச் சாட்சி மதிக்கின்ற தீர்ப்புக்களை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற ஜஸ்டிஸ் சோமசுந்தரம், ஜஸ்டிஸ் மகராஜன் ஆகியோருக்குக் கலங்கரை விளக்கமாய் ஒளிவீசிச் சுழன்றவர். மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

கர்நாடக இசைத் துறையின் சாகித்தியக் கர்த்தாக்களாக விளங்கிய தியான்கயர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சிதர் போன்றோரின் மொழி ஆதிக்க வெறியை மறுத்து, தனது தாய்மொழியான தமிழ் மொழியில் சாகித்திய உருப்படிகளை உருவாக்கிய முதல் வாக்கேய காரர். அதாவது தமிழ் மொழியின் முதல் இசைப்புலவர் என்ற இசை வித்தகராக வாழ்ந்து பணியாற்றிய சான்றாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை