உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மெய்யைப் பொய்யாக்கி, பொய்யை மெய்யாக்கி வாதாடி வயிறு வளர்க்கும் வழக்குரைஞர்களுளின் சட்ட மோசடி வாதாட்டத்தை மறுத்து, பொய் வழக்கை ஏற்று வாதாடாமல், உண்மைக்குத் தோள் கொடுத்து, உயிர் கொடுத்து, சட்ட வடிவச் சத்தியத்திற்கு எடுத்துக் காட்டாக திருவாவடுதுறை ஆதின வழக்குக்கு உயிரூட்டி நின்ற வழக்குரைஞர் திலகமாக நடமாடியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

மேலவர் கீழும், கீழவர் மேலுமாய் சுழல்வது போல, உலகத்தில் இன்று உயர்ந்தோர் நாளை வறியோர் ஆவர் என்ற சமத்துவ மனிதநேயத்துக்கு ஊன்றுகோலாகநின்று வழுக்கி விழாத ஒழுக்க சீலர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை

நீதிபதி பதவியிலே இருந்து ஒய்வு பெற்ற பின்னர், சூரியன் தனது ஒளியால் எல்லாப் பொருட்களையும் பிரகாசிக்கச் செய்வது போல, வேதநாயகம் தன்னுடைய ஒழுக்கமான நடத்தையால், மனித நேய மாண்பால், மாயூரம் மக்கள் குணங்களைத் திருந்தச் செய்து, தனக்கென தனி மாளிகை வேண்டாம் என்று எண்ணி மக்களது மனங்களையே உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்து, மற்ற நகர்மன்றத் தலைவர்களுக்கு எல்லாம் மகுடபதியாக வாழ்ந்து காட்டியவர் மாயூரம் வேத நாயகம் பிள்ளை.

இவை போன்ற எண்ணற்ற குணச்சிறப்புக்களை, செயற்கரிய செயல்களை, மக்கள் மெச்சிய மனிதநேய எண்ணங்களை அவரிடம் எடுத்துக்காட்டாலாம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை காலத்தோடு காலமாய் கலந்து விட்டபோது, அந்த பல்கலை மேதை இயற்கையெய்திய நேரத்தில் இந்து நாளேடு ஒரு தலையங்கமே எழுதிப் பிள்ளையை விரிவாகப் பாராட்டியது. ஒரு கிறித்துவ ஞானியின் அறம் சார்ந்த பண்புச் செயல்களை அந்த நாளேடு எவ்வாறு போற்றி மதித்திருக்கிறது என்பதை இன்று எண்ணிப்