உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அதிபதி நாம் என அறிவீர்; நம் முன்னம் சத்தியமா

அறைகுவீரே.

சீர்காழி ஈசரே விண்ணோரும் மண்ணோரும் போற்றித் துதிக்கும் பல விதமான பாமாலைகளை நீர் குடியிருப்பீர் ஆனால், எமது மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் உமக்குப் பாடிச் சூட்டிய சீர்காழிக் கோவையைப் போல ஒன்றையாவது பெற்றிருப்பீர் களா? சொல்லுங்கள்!

இந்த சீர்காழிப் பகுதிக்குரிய நீதிபதியான நான் உம்மைக் கேட்கிறேன். நம்முன் உண்மையைக் கூறும் சத்தியமாகச் சாற்றும், என்று. மகேசனார்முன்பு நீதிமன்ற நீதி வழக்குவிசாரணை செய்வது போல, மீனாட்சி சுந்தரத்தின் காழிக் கோவை போலப் பெற்றதுண்டா? என்று, ஈசனாரையே கேள்வி கேட்கும் அருமை, பெருமையைப் படித்து தமிழ்த்தும்பிகள் பரவசமாகப் பறக்கின்றன.

வேதநாயகர் முக்கண் பெருமானையே.கேட்ட கேள்வி, அன்று சிவவெருமானை நோக்கி நக்கீரனார் கேட்ட கேள்வியினை மீனாட்சி சுந்தரனாருக்கு நினைவுறுத்தியது. அதனால், தம்மீது வேதநாயகர் வைத்துள்ள தனி அன்பைக் கண்டு ஆச்சரியப்பட்டு,

"நாட்டுக்கு நல்ல குளத்தூர் வேதநாயக நன் நாமமாலே!

வீட்டுக்கு வாயிலெனும் காழிக் கோவை எனைவிளம்பச்

செய்தே

ஏட்டுக்கும் அடங்காத துதிகவிகள் சொற்றனை, நின்

இயற்பாட்டுள்

பாட்டுக்கு நான் செய்த தொன்றோ பல் செய்தாலும்

பற்றா அன்றே.