உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 73

வேதநாயகம் பிள்ளையின் கவியாற்றலைக் கண்ட மகாவித்துவான் அவரது தமிழ்ப் பண்பை, பாடறிந்து ஒழுகும் அறிவுக் கூர்மையைப் புகழ்ந்து கொண்டாடிப் போற்றி மகிழ்ந்தார். அதே நேரத்திலே காழிக் கோவை நூலும் வேதநாயகர் தலைமையிலே அரங்கேறியது. நூலரங்கத்திலே கூடியிருந்த சேவார்த்திகளும், தமிழ்ச் சான்றோர்களும், நிலச்சுவான் தாரர்களும், பிரபுக்களும் மகாவித்துவான் பெருமானாருக்குப் பொன்னாடைகளைப் போர்த்தி, பரிசுகள் பல வழங்கிப்பாராட்டிப் போற்றினார்கள்.

பண்டார சந்நிதிகள் சைவாதீனங்கள்

முன்சிஃப் வேதநாயகர் வாழ்ந்த காலத்தில் சென்னை மாகாணத்தில் பெரிய, சிறிய இந்து சமய அறநிலையங்கள், அனைத்தையும் சேர்த்து 28,260 கோயில் மடங்கள் இருந்தன. சொந்தமாக இருந்த நிலங்கள் மட்டும் 8 லட் ஏக்கர் அவற்றின் ஆண்டு வருவாய் 32 கோடி ரூபாயாகும்.

இந்த ஆதினங்களில் பெரியது திருவாவடு துறை சைவமட ஆதினமாகும். இம் மடத்தின் தலைவருக்கு மகா சந்நிதான்ம் அல்லது பண்டார சந்நிதிகள் என்று பெயர். இவர்கள் கயிலாய பரம்பரையிலே, நந்திதேவர் மரபிலே வந்தவர்கள் என்று கூறுவது மரபு. இவர்கள் மெய்கண்டான் சந்தான் வழியிலே வந்தவர்கள் ஆவர்.

மெய்கண்டார் என்றால் யார்? அவர் கண்ட மெய் யாது? கட்வுள் ஒருவர் உண்டு. அவரால் அருள் செய்யப்படும் உயிர்கள் உண்டு. அந்த உயிர்களைப் பற்றி பாசம் என்ற நோயும் உண்டு. அதனைத் தீர்க்க இறைவன் உயிர்களுக்கு உடம்பையும் அதற்குரிய அமைப்பையும் தந்துள்ளார். அதனால், மக்கள் உலக சுக போகங்களையும் அனுபவிக்கிறார்கள்.