பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

இச்சித்தாந்தத்தை குருமரபிலே பெற்று, தமிழிலே விளக்கிய அருட்குரவர் மெய்கண்டதேசிகர் என்பவர். அவர் கி.பி. 1225 ஆம் ஆண்டிலே பிறந்தார். அவர் வழியிலே வருபவரைத்தான்் மெய்கண்ட சந்நிதான்ம் என்பர். சுத்தாத்துவிதம் இவர்கள் கொள்கை. அதைப் பரப்புவதற்கு இவர்கள் தமிழகத்தில் மடங்களைத் தாபித்தார்கள். கி.பி. 16 ஆம் நூற்றாண்டிலே சற்று முன் பின்னாக இந்த மடாலயங்கள் நிறுவப்பட்டன. அவற்றிலே ஒன்றுதான்்திருவாவடுதுறை மற்றது தருமபுரம், இந்த மடங்களிலே தவ வேடமும், சிவவேடமும் பூண்ட துறவிகள் தங்கி, ஒழுக்கம் போதித்து வந்தார்கள்.

பூரீ சுப்பிரமணிய தேசிகர் - யார்?

திருவாவடுதுறை ஆதினத்தின் ஆதித் தலைவர் நமச்சிவாய மூர்த்திகள். இவர் மெய்கண்டார் வழியிலே வந்த ஏழாவது குரு சந்நிதான்மாவார்.16 ஆம் பட்டத்திலே 1869 ஆம் ஆண்டு முதல் எழுந்தருளியிருந்தவர் பூரீ சுப்பிரமணிய தேசிகர். குறவஞ்சி என்ற நூலின் ஆசிரியரான திரிவட ராசப்பன் கவிராயர் மரபிலே வந்த தமிழ்ப் புலமையாளராவார். தமிழார்வமும், தமிழ்ப் பற்றும் அவரது குடும்பவழி வந்த உணர்ச்சியாகும்.

பூரீ சுப்பிரமணிய தேசிகர் வடமொழியிலும் இசையிலும் ஞானப்புலமை பெற்றவர். சித்தாந்த சாஸ்திரங்களிலே தேர்ச்சிபெற்றவர். கவிஞர்களையும், கலைவாணர்களையும் அவரவர் அருமை புரிந்து பெருமைப் படுத்துபவர்.

இந்த நேரத்திலேதான்், வேத நாயகம் பிள்ளை மாயூரத்திலே முன்சிஃப்பாக பதவி பெற்றார். அவரின் ஒழுக்க மேம்பாடு, புலமைப் பொலிவு, தமிழார்வஞானம் நீதிபரிபாலனத்திறனால் மக்களிடம் அவர் பெற்ற செல்வாக்கு, ஆங்கிலப் புலமையின்