உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மாயூரம் வேதநாயகம் பிள்ள்ை

வென்று மேம்படு வேதநாயக விறல்வேளா.

அரியபுகழ் பெறும்வேத நாயகமா மசிபாலற்கு அமைந்த

வாக்கின்

பிரியமிகு சுவைஅறிஞர் செவியுணவு கொளுந்தோறும்

பேசேஞ் ஞான்றும்

உரியவயிற் நுணவொழித்து வள்ளுவர்தம் சொற்பொருள்

வற்புறுத்தும் என்னில்

ஏதரிய அஃது இச்சுவையது இத்தகையது என்றெடுத்து யாம் செப்பலாமே.

நீதிபதியும், சமயக் குரவருமான இவர்கள் இரண்டு பேர்களுக்கும் மதம் வேறு வேறு. என்றாலும், தமிழர்களான இவர்கள் கலந்துரையாடுவதற்கு மதபேதம் குறுக்கே நிற்கவில்லை ஆனால், இருவரும் கலை வித்தகர்கள். இவர்கள் மகிழ்ந்து அளவளாவிய போது அக் குழுவிலே சூரிய மூர்த்தியா பிள்ளையும் மகாவித்வானும் இருந்தார்கள். இவர் துணைக் கலெக்டராக இருந்தவர். கலெக்கடர் என்றால் அந்த நாளில் கேட்கவா வேண்டும்? ஒரே சர்வாதிகாரி தர்பார்தான்ே. வதநாயகருடைய விநயமான வார்த்தைகளும், பண்டார சன்னதிகளுடைய அருளுரைகளும், அவர்களுடைய உரை யாடலைக் கேட்டுப்பரவசப்படும் கலெக்டருடைய பரிவும், வேதநாயகருடைய ஆசுகவிகள், மதுரகவிகள் வித்தாரக் கவிகளைக் கண்ட மக்கள், கவிபாட வல்லார்அவர் ஒருவரே வேதநாயகம் என்று பேசினார்கள் திருவாவடுதுறை ஆதினத்தை விட்டு வேதநாயகர் மாயூரம் திரும்பினார்.