பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 33

பரிந்துரைக் கவிதைகள்

1876 ஆம் ஆண்டில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மரணமடைந்தார். அவர் மகன் சிதம்பரம் பிள்ளை குடும்ப வறுமையிலே வாடியது. இதைக் கேள்விப்பட்ட வேதநாயகர் ஆதின தேசிகருக்கு ஐந்து பாடல்களை எழுதி அனுப்பினார்.

இந்தக் கவிகளைக் கண்ட பண்டார சந்நிதி, அவரை அழைத்துவரச் சொல்லி என்னென்ன உதவிகள் அவருக்குத் தேவையோ அவை அனைத்தையும் செய்தார். வறுமையிலே வாடிய அவரது வாழ்வு வேதநாயகரால் வளம் பெற்றது.

வீரபத்திரன் என்பவர் ஒர் ஆசிரியர். அந்த ஆசிரியருக்கு கலெக்டர் சூரிய மூர்த்தியா பிள்ளையிடம் சிபாரிசு தேவைப் அதனால், வேதநாயகர் கலெக்டருக்கு ஒரு பரிந்துரைக் لقاتل கவிதை எழுதியனுப்பி, வேண்டிய உதவிகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். வேதநாயகர் சிபாரிசுக் கடிதக் கவிதையைக் கலெக்டர் படித்து மகிழ்ச்சியடைந்து, அவருக்குரிய உதவிகளைச் செய்தார்.

கோபால் ஐயர் என்பவருக்கு திருவாவடு துறையில் நிலம் இருந்தது. அதை வாங்கும் சக்தி ஞானதேசிகர் ஒருவருக்கு மட்டுமே இருந்ததால், பண்டார சந்நதிகளுக்கும் ஒரு பரிந்துரைக் கவி எழுதியனுப்பி கோயல் ஐயருக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார் வேதநாயகம். அதற்கேற்ப ஆதினத்தலைவரான தேசிகர் வேதநாயகர் எழுதியதைப் படித்து வேண்டிய உதவிகளைச் செய்தார்.