உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மெல்லத் தமிழ் இனி சாகுமென மனம் நொந்தார்.

ஆட்டுத்தோல் இடம் கேட்டு இந்தியாவுடன் வணிகம்.புரிய வந்த ஆங்கிலேயக் கிழக்கு இந்தியக் கம்பெனியார், நாடு முழுவதையும் ஆட்சி செய்யும் நிலையேற்பட்டது உலக வரலாற்றில் அதிசய சம்பவமாகும்.

ஆங்கில ஆதிக்கம் நாடெங்கும் பரவியபோது, இந்திய மக்களுடைய அன்பையும் ஆதரவையும் பெறவேண்டும் என்பதற்காக, அரபி, சமஸ்கிருத கலை நாகரீகங்களை வளர்ப்பதிலே அதிகாரிகள் அக்கறை காட்டினார்கள்.

வெள்ளையர்கள் நிருவாகம் நடைபெற வேண்டாமா? அதற்கு இந்திய அதிகாரிகள் தான்ே தேவை. அதனால், அவர்களுக்கு மொழிப் பயிற்சி தரவும், இந்தியர்கள் அபிமானத்தைப் பெறவும் 1780 ஆம் ஆண்டு, வாரன்ஹேஸ்டிங்ஸ் தமது சொந்த முயற்சியில், கல்கத்தாவில் ஒரு மதராசா ஒன்றை உருவாக்கினார். இதன் நோக்கம், அரபி, பாரசீகக் கலைகளிலே இந்தியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதாகும்.

அதற்குப் பிறகு 1791 ஆம் ஆண்டில், காரன்வாலிஸ் காலத்தில் சமஸ்கிருதக் கலையை வளர்ப்பதற்கென்று காசி மாநகரிலே ஒரு பல்கலைக் கழ்கம் உருவானது. 1811ஆம் ஆண்டில் மிண்டோ பிரபுவும் சமஸ்கிருதப் பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதனை வளர்க்க முற்பட்டார்.