பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 35

இக் காலங்களிலே, கம்பெனி சர்க்காரிலே ஆங்கில மொழிப் பயிற்சி அல்லது. ஐரோப்பியக் கல்வி முறை என்ற பிரபல்யம் பெறவில்லை. அரபி, சமஸ்கிருதக் கல்வி முறைக்கே ஆட்சி ஆதரவாய் இருந்தது.

ஆங்கில மொழி வாதம்!

இதற்குப் பிறகு, ஆட்சி பீடமான கல்கத்தாவிலே, நாகரீகக் கலப்பால் வங்காள மக்களிடையே ஓர் உணர்ச்சி ஓங்கியது. ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை அவர்கள் வற்புறுத்தினார்கள்.

இராசாராம் மோகன் ராய் என்பவரை நீங்கள் அறிவீர்கள். வங்கமொழியிலே அவர் பெரும் புலவர் சமஸ்கிருத மொழியிலே பண்டிதர் ஆங்கிலத்திலே பேரறிஞர் ஆதி சீர்திருத்த வாதி. ஒருமுறை இவர் சாட்சியம் அளித்த போது, வங்காளிகள் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் குழந்தைகள் ஆங்கிலம் கற்கவே விரும்புகிறார்கள். என்றார்.

இந்தக் கால எல்லையிலே கல்வி பற்றி ஒன்றுக் கொன்று முரண்பட்ட இரண்டு கருத்துக்கள் நாட்டிலே நடமாடின. ஒன்று அரபி சமஸ்கிருதக் கல்வி ஆகிய கீழ்த் திசைக் கலை ஞானங்களை வளர்ப்பது; இந்த வைதிகக் கொள்கை ஆங்கிலேயர் ஆட்சியில் ஆதிக்கம் பெற்றது.

மற்றது, ஆங்கில மொழி அறிவிலே இந்தியரைப் பயிற்றுவிப்பது. ஆரம்பத்திலே இந்த ஆங்கிலவாதிகளுக்கு ஆட்சியிலே செல்வாக்கில்லை. அதனால், வைதீகர் கை ஓங்கி இருந்தது.