உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 # மாயூரம் வேதநாயகம் பிள்ளை

தாய்மொழி வாதம்!

வேகமாக வளர்ந்து வந்த இந்த வாதங்கள் இடையே தாய் மொழி வாதம் ஒன்று தலை எடுத்தது. இதன் தலைவர் வில்கின்சன் Wii KośCN Grou jøjst.

இவர், பாமரமக்கள் இடையே கல்வியைப் பரப்புவது அரபி சமஸ்கிருத மொழிகளால் முடியாது. ஆங்கிலத்தால் கூடாது. தாய்மொழி ஒன்றின் மூலம்தான்் அது நடக்க முடியும் என்ற உண்மையை, 1834 ஆம் ஆண்டின்போது வெளியிட்டார்.

பம்பாய் மாகாணத்திலே எலிபென்ஸ்டன் என்பவர் கவர்னராய் இருந்தபோது, 1821 ஆம் ஆண்டு முதல் 1827 ஆம் ஆண்டு வரை இந்தத் தாய்மொழிக கொள்கை அவரால் அமுல் நடத்தப்பட்டது. கணிதம், இயற்கை, மருத்துவம் போன்ற நூல்கள், மராத்தி, குசராத்தி மொழிகளில் 1823 ஆம் ஆண்டு முதல் 1826 ஆம் ஆண்டுகளிலே மொழிபெயர்க்கப்பட்டு, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் தாய்மொழி மூலம் போதிக்கப் பட்டன. தாழ்ந்தது தாய்த் தமிழ்

அறிஞர்களுக்கு ஆங்கிலம்: பாமரர்களுக்குத் தாய் மொழி: ஆங்கில மொழி அறிவு வளர்வதால் பரவும் கலைஞானத்திலே அவரவர் தாய் மொழி தான்ாக வளரும் என்ற இங்கிலீஷ் காரர்கள் முடிவு சமஸ்கிருதத்திற்குப் போலவே, தமிழுக்கும் விரோத மாகவே அமுல் நடத்தப்பட்டது.

"ஆங்கிலம் ஒன்றையே கற்றார் - அதற்கு

ஆவியோடு யாக்கையும் விற்றார். தாங்களும் அந்நியரானார் - செல்வத்

தமிழின் தொடர்பற்றுப் போனார்.” என்ற நிலை ஏற்பட்டது.