பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. வேதநாயகம் பிள்ளை நகர்மன்றத் தலைவரானார்

நீதிபதி உத்தியோகத்திலே இருந்து வேதநாயகம் பிள்ளை ஒய்வு பெற்றார். மாயவரம் நகர மன்றத்திலே அதன் தலைவராகப் பதவியேற்று அமர்ந்தார். நேர்மை தவறாத நீதிபதி என்று பெயர் பெற்றது போலவே, அவர் நகர்மன்றத் தலைவராகவும் பணி யாற்றிப் பெரும் புகழ்பெற்றார். மாயவரம் நகர் மன்றம் உருவான ஆரம்பகாலத்திலேயே அதன் வழிகாட்டியாய் வேத நாயகம் பிள்ளை பணியாற்றியதால் அந்த மன்றத்திற்கும், மயாவரம் நகரின் முன்னேற்றத்திற்கும் அவர் காரணமாக விளங்கினார்.

வேத நாயகம் பிள்ளை, தான்் எழுதிய முதல் தமிழ் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தின் மூலமாக அவரே பேசுகிறார்; படியுங்கள்.

நகர்மன்றத் தலைவன் பண்பு

'உலகிலே உள்ள ச்கல பதவிகளிலும் அதிகாரங்களிலும் தலைவர் பதவி எப்படி மேன்மையானதோ, அப்படியே அதைச் சார்ந்த அலுவல்களும் அபாரமாய் இருக்கின்றன். குடும்பத் தலைவன் தன் குடும்பத்துக்காக ஓயாமல் உழைக்கின்றான். ஆயிரமாயிரம் குடும்பங்களுக்குத் தலைவனாக இருக்கிற நகரப் பிதா, ஒரு கணமேனும் சும்மா இருக்கலாமா? சொற்பக் கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்கிறவன் அல்லும் பகலும்