பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை

உழைக்கிறான். அப்படியானால், அளவில்லாத வருமானங் களையும், ஊதியங்களையும் உரிமைகளையும் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டதலைவன், அந்த மக்களுக்காக எவ்வளவு பாடுபட வேண்டும்? ஆதலின், தலைவனுடைய நேரமும், புத்தியும், சக்தியும் சனங்களுக்குச் சொந்தமே அன்றித் தலைவனுக்குச் சொந்தம் அல்ல. சனங்களுடைய இன்ப :ன்பங்களையே தன்னுடையனவாகத் தலைவன் மதிக்க வேண்டுமே அன்றித், தன்னையும் மக்களையும் வேறு வேறாகக் கருதக் கூடாது:

எப்போதும் யாவரும் காணும்படி மலர்ந்த முகத்தை உடையவன் தலைவன்; அவன் அருள் பொழிகின்ற கண்ணை உடையவன் மக்களுடைய குறை கேட்கச் சித்தமாயிருக்கிற

செவியுடையவன். வாய்மையும், இன்சொல்லும் குடிகொண்ட

அறமே அவதரித்தது போன்ற நற்குண நற்செய்கைகள் உடையவன்; புத்தியிலும் யுக்தியிலும், சாமர்த்தியத்திலும் யாவரினும் மேலானவன் அப்படி இல்லாவிட்டால் அவனை யார் மதிப்பார்கள்? சூரியன் தன்னுடைய ஒளியால் எல்லாப் பொருள்களையும் பிரகாசிக்கச் செய்வது போலத், தலைவன் தன்னுடைய நடத்தையால் குடிகளுடைய குணம் திருந்தும்படிச் செய்ய வேண்டும். அதனால், அவன் மக்களுடைய மனங்களையே வாசத்தலமாகப் பெறுகிறான்; தனக்கென்று தனி மாளிகை வேண்டுவதில்லை.

தலைவனுடைய தகுதி தன்மைகளைப் பற்றி இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வேதநாயகம் பிள்ளையால், மாயூரத்துக்கு அமைந்த நலங்கள் பல இவருடைய ஆட்சியிலே