உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 95

நகர் மன்றம், பலதுறைகளிலும் முன்னேறி வளர்ந்தது. வருமானத்துக்கு ஏற்ப செலவினங்களைச்சரிக்கட்டி செட்டாகவும் சீராகவும் நடந்து, பொதுநலத்துக்குகந்த காரியங்களிலே கருத்தாக இருந்தார். வேதநாயகம் செய்த நகர்த் தொண்டுகள்:

நடை பாதைகளையும், சாலைகளையும் அமைப்பித்து, அவைகளைச் செம்மையாகப் பேணி வந்தார். குருடர், முடவர்களும், அனாதைகளும் நகரத்திலே நடமாடிப் பிச்சை எடுக்காதபடி, அறச்சாலைகளை அமைத்தார். மருத்துவச் சாலைகளை நிறுவி, இலவச வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்தார். பள்ளிக் கூடங்களைத் தொடங்கிக் கல்வியுடன் தெய்வ பக்தி நீதி நெறிகளைக் கற்பிக்கத் திட்டம் செய்தார். பெண்கள் கல்வியிலே மிகுந்த சிரத்தை எடுத்தார். சிறுவர்க்குத் தேக பலமும் நலமும் உண்டாகும்படி சிலம்பக் கூடம் முதலிய பயிற்சி மேடைகளைத் தாபித்தார்.

மாயூரத்து நகரின் வீடுகளும், தெருக்களும் நாகரீகமாகவும். காற்று நடமாட்டமாகவும் இருக்கும்படி நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு தமது முதுமையிலே வேத நாயகம் நகர முதல்வராக ஒய்வின்றி உழைத்தார். அதனாலே, மக்களுடைய நன்மதிப்புக்குப் பாத்திரமானார்.

நகர மன்ற நடைமுறைகளை ஒழுங்குப் படுத்துவதிலே முன்னைய உத்தியோக அனுபவம் இவருக்குத் துணை நின்றது. பிறருடைய புகழ்ச்சிகளையும், இகழ்ச்சிகளையும் பொருட்படுத் தாது, தமக்கு நியாயமாகத் தோன்றிய் காரியங்களை நேர்மை யாகவும். நிதான்மாகவும் செய்து முடித்தார்.