உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பொது வாழ்வுக்கு வேதமானார்!

வேதநாயகம் பிள்ளை கி.பி.1851 ஆம் ஆண்டில் தமது 25-ம் வயதிலே காரைக்கால் நகரைச் சார்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையர் திலகத்தை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் அந்த அம்மையார் மறைந்தார்.

அதற்குப் பிறகு பாப்பம்மாள் தமக்கையான ஞானாப்பூ அம்மையார் மகள் லாசர் என்பரை மணந்து கொண்டார். அவரும் சில ஆண்டுகளில் இயற்கையெய்தினார். அடுத்தடுத்து இரு மனைவியரை இயற்கைக்குப் பலி கொடுத்த வேதநாயகர், மூன்றாவதாக, புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணம் புரிந்தார். அந்த அம்மையார் மூன்று குழந்தைகளை ஈன்றளித்துவிட்டு மாண்டார்.

குழந்தைகளைப் பாதுகாக்க, வளர்க்க வேறு துணையேதும் இல்லாததாலும், பொது வாழ்க்கையிலே ஓய்வின்றி உழைத்து வரும் நிலை உருவானதாலும் நான்காவதாக புதுவை அன்னக் கண்ணம்மாளைக் கலியாணம் செய்து கொண்டார். அந்த அம்மையாரும் சில ஆண்டுகளில் மரணமடைந்தார். அதற்குப் பிறகு, அம்மாளம்மாளை மணம் செய்து கொண்டார். அந்தத் தாயும் சாவுக்கு இரையானதால், வேதநாயகம் பிள்ளையும்