உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

குழந்தைகளும் மீளாத் துயருற்று வாழ்ந்து வந்தார்கள். மனைவியின் மரணத்தைக் கண்டு மனம் வருந்தியபோது,

"அண்ட பண்ட மெல்லம் அழியா திருக்கி நீ

பூண்ட உடையிருக்கப் பூண் இருக்க -மாண்டனையே

அன்னமே உன்னை அடித்தேனோ? வைதேனோ?

சொன்னமே ஏன்போனாய் சொல்?”

என்ற பாடலை எழுதி வேதநாயகர் மனம் உழன்றார் ஆறாத் துயருற்றார். மனைவியர்கள் மீது மட்டுமல்ல; தாய்க்குலம் மீதே பெரிய ஈடுபாடும், பக்தியும் பாசமும் கொண்டிருந்தவர் பெண்கல்வி, பெண் மானம் போன்றவற்றுக்காகவே அவருடைய எழுத்துக்களும், பேச்சுக்களும் அமைந்து உழைத்தன.

ஒருமுறை அன்னக் கண்ணம்மையார்வேதநாயகம் பாடல் எழுதும் போது அருகே அமர்ந்திருந்து பருகப்பால் ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் நீதி நூல் பாடல் ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார்.

அப்பாடல் முதல்வரியை அவர் எழுதும் போது:

‘மாதரை நம்பாதே மனமே

மாதரை நம்பாதே என்று எழுதினார். அப்போது அவருக்குப் பருகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த அம்மையார், ‘என்னங்க் ஐயா இது. என்னைக் கூட நீங்கள் நம்பமாட்டீர்களா? என்றார்

“என்ன அன்னம் இப்படிக் கூறுகிறாய்” என்று வேதநாயகம் கேட்டார் மாதரை நம்பாதே என்று எழுதி இருக்கிறீர்களே, அது என்னையும் சேர்த்துத் தான்ே, ஐயா என்று பணிவுடன் கேட்டார்.