திருவேரகம்! திருப்புகழ் உரை 59 220. (சிறந்த அன்பர்களுடைய)நாவில் ஊறிய பாடல்களின் மணம் வீசுகின்ற (உனது) பாதார விந்தத்தையே நினைத்து நாலாறும் (இருபத்து நான்கும்) ஒரு நாலும் கூடிய (ஆக இருபத்தெட்டு) வகையானவையும் - (சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும்) நாலுபாதங்கள் பொருந்தினவையுமாயுள்ள ஆகம நூல்களிற் கூறப்பட்டுள்ள ஞான முத்தி நெறியே நாள்தோறும் நான் அநுட்டிக்கும் நெறியாகவும் - நீவேறு நான்வேறு என்னும் பிரிவு இல்லாது (சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுபட்ட நிலையாகி) நேர்பட்டு வாழ்வதற்கு உனது திருவருள் பெருகிமிக பரந்துள்ள ஆறாதாரங்களின் மேற்பட்ட நிலையிலே பராபரப் பொருளை நீ காண்பாயாக என்ற அந்த (ஐக்கிய) வசனத்தைச் சொல்லை (உபதேசித்து) அருளுக. இடபத்தின் மேலேறும் சிவபிரான் வலம் வந்து நிற்க சிறந்த ஞான அறிவு உபதேசத்தை செம்மையாகவே சொன்ன குருநாதனே! பகைவர்களின் நாடுகளைச் சுட்டழித்த சூரர்களை இறக்கும்படி வெட்டின திரனே! குகனே! குறத்தி (வள்ளியின்) மணவாளனே! அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் யோக ஸ்தானம். பிரமரந்திரம் என்பது உச்சித் துவாரம். "ஆதாரம் ஆதாரத்தலம் ஆதாரக்கடவுள் மூலாதாரம்- திருவாரூர்.(தியாகேசர் தலம்) விநாயகர் சுவாதிட்டானம். திருவானைக்கா-(ஜம்புநாதர் தலம்) பிரமன் மணிபூரகம்- அண்ணாமலை(அருணாசலேசர்தலம்) திருமால் அனாகதம்- சிதம்பரம் (சபாபதி தலம்) ருத்திரன் விசுத்தி. காளத்தி (காளத்திசர் தலம்) மகேசுரன் ஆஞ்ஞை. காசி (விசுவேசர் தலம்) சதாசிவன் பிரமரந்திரம்- கைலை; துவாத சாந்தத் தலம். மதுரை
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/532
Appearance