உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப் புகழ் உரை 291 காம வேதனைப்பட்டு படுக்கையில் எப்போதும் நாள்தோறும் கஸ்தூரி முதலிய நறுமணங்கள் சேர்ந்துள்ள கூந்தலின் நிழலிலே முழுகினவனாய். அதனால் ஏற்படும் காம மயக்கம் என்கின்ற பெரிய (மாயை) மாயாசக்தி என்னை விட்டு அகலுமாறும், அடியேன் விணனாகாதவாறும் (பயனற்றவனாகாதவாறும்) உன்னுடைய திருவருளைத் தந்து உதவுக. அரகரா என்று கூறாத மூடர்களும், திருவெண்ணிற்றை விபூதியை - இடாத மூடர்களும், (அடிகள்) கடவுளைப் பூசியாத மூடர்களும், கரையேறுதற்கு வேண்டிய அறிவைத்தரும் நூல்களைப் படியாத மூடர்களும், நன்னெறியில் நில்லாத மூடர்களும், தருமம் இன்னதென்றுகூட விசாரணை செய்யாத (ஆய்ந்தறியாத) மூடர்களும் - நரகம் ஏழிலும் புரளும்படி விழுவார்கள், பன்னிரண்டு (திருக்கரங்களை உடைய விநோதனே! சேயே! ஜோதியே! நிறைந்த அல்லது ஒளி பொருந்திய பூரண உருவத்தனே! முருகனே! மேகங்கள் உலவும் விண்ணுலகத்தவர் போற்றிப் பரவி நாளும் ஈடேறுகின்ற, சீகாழியில் வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே! (நின் அருள் தாராய்) (பக்கம் 290 தொடர்ச்சி) O நரகில் வீழ்வோர் - இவரிவர் என்பதை 711-ஆம் பாடல் பக்கம் 140 கீழ்க்குறிப்பைப் பார்க்க

  • புரணம் - ஒளி. "புரணவாட் கண்ணி சொல்வான்" சேது புராணம் - சாத்தியா 18.

ft விண்ணவர் பரவுவது: "விண்ணவர் தொழு புகலி" - சம்பந்தர் 3-3-10, "வானுளோர் அடுத்தடுத்துப் புகுந்திண்டும்.புகலி" -சம்பந்தர் 2-122.10.