உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

107

அவர்களது நிலைமை விவரிக்க வொண்ணாததாயும், மனிதரால் ஒரு நொடியேனும் சகிக்க வொண்ணாததாயும் இருந்தது. மனமோ பெரும் புண்ணாக இருந்தது. தேகமோ கட்டிற் கடங்காமல் பறந்தது. கீழே குனிந்து நிமிர்வார் களானால், கண்கள் இருண்டன; மயங்கி விழுந்து தட்டுத் தடுமாறி சுவரைப் பிடித்துக் கொள்ளும் நிலைமையிலிருந்தனர். தங்கம்மாளின் கோரமான தோற்றத்தைக் காண, இருவரும் தள்ளாடிக் கீழே வீழ்ந்துவிடும் தருணத்தில் இருந்தனர். கனகம்மாள் மாத்திரம் தமது அன்பின் பெருக்கினால் சிறிது சமாளித்துக் கொண்டாள். சாம்பசிவம் இடுப்பொடிபட்ட வரைப்போல கீழே உட்கார்ந்துவிட்டார்; உட்கார்ந்தவர் பேசும் வல்லமையற்று ஊமையனைப்போல மாறி உருட்டி உருட்டி விழித்துக்கொண்டு பைத்தியக்காரனோ வென்னும்படி யிருந்தார். தேகம் நெருப்புக் குவியலானது. தாம் இருந்தது ஆகாயமோ பூமியோ வென்பது தோன்றவில்லை. கனகம்மாளோ தன்னையும் தானிருக்கும் இடத்தையும் மறந்து நாட்டுப்பெண்ணின் உடம்பை அன்போடு தடவிக்கொடுத்த வண்ணம் கண்ணீர் பெய்து கரைந்து பிரலாபித்து அழத் தொடங்கினாள். “ஐயோ! என் கண்ணே! உனக்கும் இந்த கதி வந்ததா! என் குடியை விளக்க வந்த மஹா லக்ஷுமியல்லவா நீ! உன்னைப் போன்ற நாட்டுப் பெண்ணை நான் இனி பெறுவேனா! என் தங்கமே! உன் வாயை இனி திறப்பாயோ திறக்க மாட்டாயோ! அத்தனையும் தங்கமல்லவா நீ! என் ராஜாத்தி! உன்னை அருந்ததி யென்றாலும் தகுமே! அடி உத்தமியே! உன்னை அடித்தவன் வீடு இந்நேரம் பாழாய்ப் போயிராதா! அவன் குடும்பம் ஏழேழு தலைமுறைக்கும் நசித்து நரகத்தில் வசிக்காதா? ஆகாசத்திலுள்ள இடிகளெல்லாம் அவர்கள் தலையில் விழாதா? என் கண்ணே! என்னப்பா என் துரை சிங்கத்துக்கு வந்து வாய்த்த மகா லக்ஷுமியே! ஐயோ! என் குடியைக் கெடுத்து வடுவாயோ! என் வீட்டு விளக்கை அவித்து விடுவாயோ! என் பாக்கிய லக்ஷுமியை அழைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/108&oldid=1251987" இலிருந்து மீள்விக்கப்பட்டது