பக்கம்:மேனகா 2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

121

கொள்வார். அவர் ஒப்புக்கொள்ளா விடில், இதன் பொருட்டு நான் எவ்வித சிட்சைக்கும் உடன்படுகிறேன். நிற்க, என் வீட்டிலிருந்த சீல், முகர் முதலியவை நேற்று என் வீட்டில் நடந்த கொள்ளையில் களவு போய்விட்டன. ஆகையால், நான் ஒப்புக்கொடுக்கக்கூடிய சர்க்கார் சாமான்கள் ஒன்றும் என்னிடமில்லை. கச்சேரி வேலையை கஜானா டிப்டி கலெக்டரே பார்த்துக்கொள்ளலாம்” என்று மறுமொழி எழுதி அதைச் சேவகனிடம் கொடுத்து புஸ்தகத்திலும் கையெழுத்துச் செய்து சேவகனை அனுப்பினர்.

அப்போது மணி ஆறரை ஆயிற்று; ரயிலுக்குப் புறப்பட வேண்டிய காலம் வந்தது. அறையின் கதவு திறக்கப்பட்டது. மெத்தை, தலையணைகள் முதலியவற்றைக் கொண்ட ஒரு அடக்கமான நீண்ட தொட்டிலில் தங்கம்மாள் விடப்பட்டிருந் தாள். நான்கு வேலைக்காரர்கள் அந்தத் தொட்டிலோடு தங்கம்மாளை அசையாமல் தூக்கி வந்து வாசலில் நின்ற ஒரு மோட்டார் வண்டியில் தொட்டிலோடு வைத்தனர். சில மருந்துகளும் சாம்பசிவத்தினிடம் கொடுக்கப்பட்டன. உடனே அவர்கள் நால்வரும் வேறொரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டனர். இரண்டு வண்டிகளும் புறப்பட்டு மெல்லச் சென்று ரயிலடியை அடைந்தன. ஐந்து நிமிஷ நேரத்தில் ரயிலும் வந்தது. வேலைக்காரர்கள் தங்கம்மாளை தொட்டிலோடு கொணர்ந்து இரண்டாவது வகுப்பு வண்டியொன்றில் வைத்துவிட்டுச் சென்றனர். சாம்பசிவம், வேலைக்காரருக்கும், மோட்டார் வண்டிக்கும் உரிய பணத்தைக் கொடுத்துவிட்டு டிக்கெட்டுகள் வாங்கிக்கொண்டார். அவரும் கனகம்மாளும் தங்கம்மாளிருந்த இரண்டாவது வகுப்பில் உட்கார்ந்து கொண்டனர். கிட்டனும், ரெங்கராஜுவும் பக்கத்திலிருந்த மூன்றாவது வகுப்பு வண்டியில் உட்கார்ந்து கொண்டனர்; ரயில் புறப்பட்டது.

பெருந்தேவி அம்மாள் கலெக்டருக்கு ஏதோ கடிதமெழுதி யிருக்கிறாளென்றும், அதைக்கொண்டே கலெக்டர் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/122&oldid=1252002" இலிருந்து மீள்விக்கப்பட்டது