உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மேனகா

உத்தரவு செய்திருக்கிறா ரென்றும், அதுவரையில் சாம்பசிவமும், கனகம்மாளும் நினைத்திருந்தனர். நிற்க, தந்தி உத்தரவு தாம் சென்னைக்கு வந்ததைக் குறித்தோ அல்லது வேறு எந்த விடத்திற்கேனும் போனதைக் குறித்தோ வென்பது அவர்களுக்கு அதுவரையில் சந்தேகமாகயிருந்தது. இப்போது தாந்தோனிராயர்மீதும் சந்தேகம் உதித்தது. அவர் தம்மீது பகைமை கொண்டு அவ்வளவு தூரம் தீம்பு செய்யக் காரணமென்ன வென்று நினைத்துப் பெரிதும் வியப்படைந்தனர். கலகம் முற்றிலும் தாந்தோனிராயரால் செய்யப் பட்டதாகவும் தோன்றவில்லை; ஏனெனில் முதல்தடவை தாம் சென்னைக்கு வந்து பெண்ணை அழைத்து வந்ததாக ஏற்பட்ட அபவாதம் தாந்தோனிராயருக்குத் தெரியாது; ஒருக்கால் அது பெருந்தேவியால் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது தமக்கு வந்த தந்தியை தாந்தோனிராயர் பார்த்திருக்க வேண்டும் என்று பலவாறு சிந்தித்தனர். இருவரும் ஆட்சேபனை செய்து ஒருவர்க்கொருவர் சமாதானம் சொல்லிக்கொண்டனர்; லஞ்சம் வாங்கினதாக ஏற்பட்ட குற்றம் இப்போது ஏன் எடுபட்டுப் போன தென்பது தெரியவில்லை. தமக்கு நேர்ந்த எதிர்பாராத எத்தனையோ கொடிய தீங்குகளில் சாம்பசிவத்திற்குச் சிறைச்சாலைப் பிரவேசம் இல்லாமல் போனதைப் பற்றி இருவரும் பெருத்த சந்தோஷமும் ஒருவகையான ஆறுதலும் அடைந்தனர். தமது சொத்துக்கள் போனதற்காகவும், உத்தி யோகம் போனதற்காகவும் அவர்கள் வருந்தவில்லை; தமது புத்திரியான மேனகா, தமக்கு அவமானம் உண்டாக்காத நிலைமையில், எவ்விதமான களங்கமும் அற்றவளாகத் திரும்பி வரவேண்டுமே என்றும், தமது மருமகப்பிள்ளையும் தங்கம்மாளும் பிழைக்கவேண்டுமே யென்றும், மேனகா திரும்பவும் தனது கணவருடன் சுகமாக வாழவேண்டுமே என்றும் பெரிதும் கவலையும் ஏக்கமும் கொண்டவர்களாய், தலையில் வைத்த கையும், தங்கத்தையே இமை கொட்டாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/123&oldid=1252004" இலிருந்து மீள்விக்கப்பட்டது