உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

159

தடவிக் கொடுத்தாள். அவள் தனக்கருகில் உட்கார்ந்ததால், அவன் சகிக்கவொண்ணாத ஒரு வகையான கிலேசத்தை அடைந்தான். உடனே வாந்தி சிறிதளவு வெளிப்பட்டது. அந்தப் பெண் சிறிதும் அருவருப்பின்றி அதைத் தனது கையாலேந்தி அப்புறமிருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டுத் தனது கையைச் சுத்தி செய்துகொண்டு வந்து அவனது வாய் முதலியவற்றைத் தனது பட்டுச் சவுக்கத்தால் துடைத்து அருகில் உட்கார்ந்து மேலும் மார்பைத் தடவிக் கொடுத்தாள். அவனது வாந்தி அவ்வளவோடு ஒய்ந்தது. அந்தப் பெண் கட்டிலை விட்டு எழுந்து எப்போது நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாளென்று அவன் நினைத்தான். அவள் அருமையான அழகுவாய்ந்த பதினாறு வயது பருவ மடந்தையாக இருந்தாளாயினும், மிகவும் பாக்கியம் பெற்றவனுக்கே கிடைக்கக்கூடிய தெய்வ ரம்பையைப் போல அவள் இருந்தாளாயினும், அவள் அன்னிய மாது என்னும் நினைவினால் அவன் அவளைத் தொடவும் அஞ்சினான். அவள் அன்போடு தனக்குச் செய்த உபசரணைகளைப் பற்றி, அவன் மனதில் நன்றியறிவு சுமந்த தாயினும், அவள் முற்றிலும் நாணமின்றியும், தான் அன்னியப் பெண்ணென்பதை மறந்தும் நடந்து கொள்வதைக் கண்டு, அவளது விஷயத்தில் அவன் இழிவான அபிப்பிராயம் கொண்டான். அவள் செய்ததைப்போல தனது மனைவியான மேனகா அதற்கு முன் உபசரணை செய்ததெல்லாம் உடனே நினைவிற்கு வந்தது. “எல்லாம் வேஷம்! பெண்பிள்ளைகள் இயற்கையிலேயே பாசாங்கு செய்யும் அவதாரங்கள்!” என்று அவன் நினைத்தான். உடனே அவளை நோக்கி, “நான் இனி வாந்தி எடுக்கமாட்டேன். நீ நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளலாம். என்னால் உனக்கு எவ்வளவு சிரமம்!” என்றான். அதைக் கேட்ட மங்கை உடனே எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். சற்று முன் உட்கொண்ட மருந்தினால் வராகசாமி ஒரு விதமான சோர்வையும், சிறிதளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/160&oldid=1252176" இலிருந்து மீள்விக்கப்பட்டது