பக்கம்:மேனகா 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

மேனகா

மயக்கத்தையும் அடைந்து கண்களை மூடிக்கொண்டு அரை நாழிகை நேரம் தூங்கி முன்னிலும் அதிகமாகத் தெளிவடைந்து விழித்துக்கொண்டான். அந்தப் பெண் சுவரில் தீட்டப்பட்ட பதுமைப்போல அசைவின்றி தன்னையே கவனித்த வண்ணம் உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவனது நினைவு தன் மாமனாரின் விஷயங்களிற் சென்றது. அவர்களைப் பற்றி அந்தத் தாதிக்கு இன்னமும் ஏதேனும் விவரம் தெரிந்திருக்கலாம் என்று நினைத்தவனாய், “மாமனாரைப்பற்றி அப்புறம் ஒரு செய்தியும் கிடைக்க வில்லையா?” என்றான் வராகசாமி.

வெள்ளை:- ஒன்றும் தெரியவில்லை - என்றாள்.

வராகசாமி:- சரி; எப்படியாவது போகட்டும். கெட்டவர் களை சுவாமி எப்படியும் தண்டித்து விடுவார்- என்றான்.

அதைக் கேட்ட வெள்ளைக்காரப் பெண், “நீங்கள் அப்படிச் சொல்வது சரியல்ல; உங்களுடைய மாமனாருக்கு நேர்ந்த விபத்துக்களைக் கேட்ட அன்னியர்களான எங்களுக்கே சகிக்கவில்லையே. நம்முடைய பகைவனுக்கு எவ்விதமான துன்பம் வந்தாலும், நாம் வருத்தப்படுவோமே. அப்படி இருக்க, உங்கள் விஷயத்தில் எவ்விதமான குற்றமும் செய்யாத மாமனார் விஷயத்தில் நீங்கள் இரக்கங்கொள்ளாமல் அதைப் பற்றி திருப்தியடைவது தருமமல்ல” என்றாள்.

வராகசாமி:- நீ சொல்வது உண்மைதான்; பொதுவான தருமமும் அதுதான்; நீ மிகவும் தயாளமான மனதைக் கொண்டவள் என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால், அவர்களுடைய ரகசியமான செய்கைகளை நீ அறிந்தால், அவர்கள் மேல் உனக்கு இவ்வளவு இரக்கம் தோன்றாது. அந்த ரகசியங்களை யெல்லாம் வெளிப்படுத்த எனக்கு மனமில்லை. பொதுவாக மனிதரோ, அல்லது வேறு எந்த ஜீவனோ துன்பப்படுவதைக் காணும்போது மனதிளக வேண்டியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/161&oldid=1252180" இலிருந்து மீள்விக்கப்பட்டது