உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

மேனகா

ஆனால், புருஷன் வேறொத்தியோடு நட்பா யிருப்பதைக் கண்டுவிட்டால், அவர்களுக்குத் தலைபோவதும் தெரியாது. அதன்பிறகு அவர்கள் தாட்சணியம் பார்க்கமாட்டார்கள்; எதற்கும் துணிந்து விடுவார்கள்- என்றார்.

அதைக் கேட்ட நைனா முகம்மது பெரிதும் கலங்கினான். தங்களது வீட்டு ரகசியங்களை யெல்லாம் அவ்வளவு தூரம் உணர்ந்த அந்தப் பெரியவர், தன்னை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்ற ஏதேனும் வழி தேடுவாரென்று அவன் நினைத்தான். என்றாலும் சந்தேகம் வருத்தியது. அவன் அவரை நோக்கி, “மகானே! என்னுடைய மாமனார் என்மேல் பிராது எழுதியதற்கு என்னுடைய சம்சாரம் சம்மதித்தாளா வென்பதே எனக்குப் பெருத்த சந்தேகமாக இருக்கிறது” என்றான்.

அதைக் கேட்ட மந்திரவாதி, ‘சரி; உமக்கு நான் இப்போதே அதை ருஜூப்படுத்துகிறேன். உம்முடைய மாமனாரின் எழுத்து உமக்கு அடையாளம் தெரியுமா?” என்றார்.

நைனாமுகம்மது:- தெரியும்.

மந்திர:- சரி; அப்படியானால் இதோ நான் என்னுடைய எட்சினி தேவதையை அழைத்து, உம்முடைய மாமனார் போலீசாருக்கு அனுப்பியுள்ள பிராதை போலீஸ் ஸ்டேஷனிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி செய்கிறேன். இதோ பாரும் - என்றார். உடனே அவர் தமது சுவடியை எடுத்துப் பலவாறு சுழற்றி, சக்கரம் போட்டு கண்களை மூடிக்கொண்டு ஆகாயத்தைப்பார்த்து, வீட்டின் உச்சிமேட்டில் தயாராக காத்திருந்த பாதாள எட்சினி தேவதையை அழைத்து ஆக்ஞை செய்தார்; கால் நாழிகை வரையில் முணுமுணுத்து மந்திர உச்சர்டனம் செய்தார்; சுவடியின் கட்டை அவிழ்த்து “பூ” வென்று ஊதினார். உடனே சுவடியிலிருந்து ஒரு காகித மடிப்பு வந்து எதிரில் விழுந்தது; அந்த அதிசயத்தைக் கண்ட நைனா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/181&oldid=1252340" இலிருந்து மீள்விக்கப்பட்டது