உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

199


மந்திர:- நான் நைனா முகம்மது எஜமானிடமிருந்து வந்திருக்கிறேன். அவர் நாலு நாளைக்கு முன் ஐயரை அழைத்து வரும்படி ஒரு ஆளை அனுப்பினாராம்; ஐயர் மைலாப்பூர் பங்களாவை வாங்குவதற்கு நாகைப்பட்டணம் போயிருப்பதாகச் சொன்னீர்களாம். இப்போது ஐயர் வந்து விட்டாரா? பங்களாவை வாங்கிவிட்டாரா? என்பதை அறிந்து வரச்சொல்லி என்னை எஜமான் அனுப்பினார்- என்றார்.

அதைக் கேட்ட அம்மாள் யோசனை செய்யாமல் அவசரப்பட்டு, “பணமெல்லாம் ரயிலில் திருட்டுப்போய் விட்டதாம்; பங்களாவை வாங்கவில்லை; வந்து விட்டார்” என்று விசனத்தோடு கூறினாள்.

மந்திரவாதி மிகுந்த வியப்பைக் காட்டி, “என்ன ஆச்சரியம்! திருட்டுப் போய் விட்டதா! எத்தனை ரூபாய் போய் விட்டது?” என்றார்.

மீனாக்ஷி:- பதினாயிரம் ரூபாய் போய் விட்டது. ஐயர் இரயிலில் ஏறி மாயவரத்திலிருந்து திருவாரூருக்குப் போனாராம்; வழியில் கொஞ்சம் தூங்கிவிட்டாராம். யாரோ மூட்டையை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களாம்.

மந்திர:- அடாடா! அவ்வளவு பணம் போய்விட்டதாக எஜமான் கேட்டால், நிரம்பவும் விசனப்படுவார். இப்போது ஐயர் உள்ளே இருக்கிறாரா?

மீனாக்ஷி:- இல்லை; சப்ரிஜிஸ்டிரார் கச்சேரிக்குப் போயிருக்கிறார்; இன்னம் ஒரு நாழிகையில் வந்துவிடுவார். அப்படித் திண்ணையில் உட்கார்ந்து கொள்ளும்.

மந்திர :- உட்கார எனக்கு நேரமில்லை. சீக்கிரம் வருவாரோ? அதிக நேரம் பிடிக்குமோ? யாருக்காவது சாட்சி சொல்லப் போனாரா? அல்லது வேறு என்ன அலுவலாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/200&oldid=1252359" இலிருந்து மீள்விக்கப்பட்டது