உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மேனகா

போனார்?

மீனாக்ஷி:- பங்களாவை வாங்கும் விஷயமாகத்தான் போயிருக்கிறார்; எனக்கு விவரம் தெரியாது. அவருடைய விசனத்தில் அதிகமாக ஒன்றையும்.சொல்லவில்லை.

மந்திர:- நாகைப்பட்டணத்திலிருந்து கப்பல்கார மரைக்காயரும் வந்திருக்கிறாரா? அல்லது ஐயர் மாத்திரம் திரும்பி வந்தாரா? -

மீனாக்ஷி:- வேறு யாரும் வரவில்லை. எல்லாவற்றிற்கும் நீர் திண்ணையில் இருந்தாலுஞ் சரி; வேறு எங்கேயாவது வேலையிலிருந்து போய்விட்டு வந்தாலுஞ் சரி; இன்னம் ஒரு நாழிகைக்குள் ஐயரைக் காணலாம்.

மந்திர:- சரி; நான் போய்விட்டு மறுபடியும் வருகிறேன்; ஐயர் வந்தால் இருக்கச் சொல்லுங்கள் என்று சொல்லி விட்டு வெளியில் நடந்தார். நடந்து நாலைந்து வீடுகளுக்கப்பால் சென்ற மந்திரவாதி சாமாவையருக்கு சப்ரிஜிஸ்டிரார் கச்சேரியில் என்ன வேலை யிருக்கலாமென்று சந்தேகித்தார். பங்களா விஷயமாகப் போயிருக்கிறாரென்றும், ஆனால், கப்பல் வியாபாரி வரவில்லை யென்றும் அம்மாள் சொல்லுகிறாள். கப்பல் வியாபாரி இல்லாமல் பங்களாவை அவர் எப்படி வாங்கக்கூடும் என்று நினைக்க நினைக்க, மந்திர வாதியின் சந்தேகம் வலுத்தது; சாமாவையரது வருகையை எதிர்பார்த்து ஒரிடத்தில் நின்று கொண்டிருப்பதைக்காட்டிலும், அருகிலிருந்த சப்ரிஜிஸ்டிராரின் கச்சேரிக்குப் போய்விட்டு வரலாமென்று தீர்மானித்துக் கொண்டவராய் மந்திரவாதி மேலே நடந்து சென்று ஐந்து நிமிஷத்தில் அந்தக் கச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அவ்விடத்தில் நூற்றுக்கணக்கில் மனிதர் கூடியிருந்தனர். தம்மைக் கண்டு எவரும் சந்தேகியாதபடி, மந்திரவாதி ஜனத்திரளில் கலந்து மறைந்து கொண்டார். ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/201&oldid=1252360" இலிருந்து மீள்விக்கப்பட்டது