பக்கம்:மேனகா 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

மேனகா


முக:- கப்பல் வியாபாரம்.

சப்.ரி:-மைலாப்பூரிலுள்ள உம்முடைய புராதன பங்களாவை பெருந்தேவியம்மாளுக்கு விற்கிறீரா?

முக:- ஆம்.

சப்.ரி:- எத்தனை ரூபாய்க்கு?

முக:- 10,500 ரூபாய்க்கு.

சப்.ரி:- முழுத்தொகையும் பெற்றுக்கொண்டீரா?

முக:- ஆம்; வாங்கிக்கொண்டேன்.

சப்.ரி:- பத்திரத்தைப் பதிவு செய்துவிடலாமா?

முக:- ஒ! செய்யலாம்.

சப்.ரி:- சரி; இரண்டு சாட்சிகள் யார் யார்?

முக:- இதோ ஐயர் ஒருவர்; அதோ செட்டியார் இன்னொருவர்.

என்று பக்கத்தில் நின்ற இருவரையும் சுட்டிக் காட்டினார். செட்டியாருக்கு அந்தக் கச்சேரியில் சாட்சி சொல்வதனாலேயே ஜீவனம் நடந்தது. ஒரு நாளைக்குப் பத்து பத்திரங்களுக்கு சாட்சி சொல்லுவார்; ஒவ்வொரு பத்திரத்திற்கும் நான்கணா எட்டனா வீதம் ஒவ்வொரு நாளைக்கு இரண்டு மூன்று ரூபாய் வரையில் சம்பாதிப்பார். ஆனால், ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய்க்கு நல்ல முதல்தரமான கள்ளாகப்பார்த்துக் குடிப்பார். மாலையில் அவர் வீட்டுக்கு வரும்போது, அவரோடு குடிக்கும் நண்பர்கள் அவரைத் தூக்கிக் கொணர்ந்து வீட்டில் விட்டுப் போவார்கள். அவரை சப் ரிஜிஸ்டிரார் நன்றாக அறிவாராயினும் அவர் அவ்வாறு குடிப்பதை அறியமாட்டார்; ஆனால், அவரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/203&oldid=1252362" இலிருந்து மீள்விக்கப்பட்டது