உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

மேனகா

உங்களுடைய காலடிக்கு வந்து சரணாகதி அடைவார்; இதை உடனே பரீட்சை செய்து பார்க்கலாம்” என்று மிகவும் உறுதியாகக் கூறினார். ஐயரது நடத்தையைப் பற்றி அம்மாளுக்கு நெடுநாட்களாக சந்தேகமிருந்தது உண்மையாதலால், அவளது கோபம் உடனே தணிந்தது. தனது கணவனை வசியம் செய்து விடவேண்டுமென்று அவள் உடனே நினைத்தாள். “அந்த மை என்னுடைய புருவத்திலிருக்கும் வரையில்தானே அவர் நான் சொன்னபடி கேட்பார். அது கூடாது; அவர் இனிமேல் எப்போதும் நான் சொல்வதையே செய்யவேண்டும். வேறு யாரிடத்திலும் அவர் ஆசை வைக்கக்கூடாது; நான் எழுந்திரு என்றால் எழுந்திருக்க வேண்டும். உட்கார் என்றால் உட்கார வேண்டும்; அப்படிப் பட்ட மருந்திருந்தால் கொடும்; நீர் கேட்கும் பணத்தை உடனே தருகிறேன்” என்றாள். அம்மாள் எளிதில் தமது வசப்பட்டதைக் கண்ட மந்திரவாதி, “மந்திர உச்சாடனம் செய்த ஒரு வேர் என்னிடம் இருக்கிறது. அதை இப்போதே தருகிறேன். தாலிச்சரட்டில் கட்டிக்கொள்ளுங்கள். அடுத்த நிமிஷம் ஐயர் என்ன செய்கிறாரென்று பாருங்கள்! ஆனால், எனக்குப் பணத்தின்மேல் ஆசையில்லை” என்றார்.

அம்மாள்:- அப்படியானால் ஒன்றும் வாங்கிக் கொள்ளாமல் இலவசமாகச் செய்கிறேன் என்கிறீரா?

மந்திர:- கூலியில்லாத வேலையுண்டா அம்மணி? தங்களுக்குத் தெரியாத காரியமா?

அம்மாள்:- அப்படியானால், என் உடம்பிலுள்ள நகைகளில் எதைக் கேட்டாலும் தருகிறேன். தங்கக் கொலுசு வேண்டுமா? இல்லாவிட்டால், என் காதிலிருக்கும் வைரக் கம்மல் வேண்டுமா?

மந்திர:- நல்ல காரியம் செய்தீர்கள். கம்மல் இரண்டாயிரம் ரூபாய், பெறுமே! உங்களுடைய ஐயரே இன்ஸ்பெக்டர்; அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/215&oldid=1252390" இலிருந்து மீள்விக்கப்பட்டது