உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

215

வசியமான பிறகு நான் கம்மலைத் திருடிக் கொண்டு போனதாகச் சொல்லி நகையையும் பிடுங்கிக்கொண்டு என்னையும் ஜெயிலில் போடப் பார்த்தீர்களா? நீங்கள் கம்மலைக் கொடுத்த பின், ஐயர் வந்து அது எங்கே என்று கேட்டால் என்ன சொல்லுவீர்கள்?

அம்மாள்:- (புன்னகை செய்து) இந்த விஷயங்களில் புருஷரை ஏமாற்ற பெண்டுகளுக்குத் தெரியாதா? எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்வதற்காகக் கழற்றிவைத்தேன். காக்கை எடுத்துக் கொண்டு போய்விட்டதென்று சொல்லி விடுகிறேன். இதற்காக நாலைந்து அடி விழுந்தாலும் ஐந்து நிமிஷத்தில் வலி ஆறிப்போகிறது. காரியம் ஆனால் அதுவே போதும்- என்றாள்.

மந்திர:- (புன்னகை செய்து) அம்மாள் பலே தந்திரசாலி! எனக்குக் கம்மலும் வேண்டாம். அதனால் அம்மாளுக்கு அவ்வளவு துன்பமும் வேண்டாம்; என்னை ஆசையோடு கட்டிக்கொண்டு எனக்கு இரண்டு முத்தங்கள் கொடுத்து விடுங்கள்; வேறொன்றும் வேண்டாம்; உடனே நான் ஐயரை வசியம் பண்ணி வைத்து விடுகிறேன் - என்றார்.

எதிர்பாராத அந்த அசங்கியமான சொல்லைக் கேட்ட அம்மாள் கொடிய புலியைப்போலச் சீறி நிமிர்ந்தாள். “அடே தொடப்பக்கட்டை என்ன சொன்னாய்? வீட்டை விட்டு வெளியில் போகிறாயா? சாணியைக் கரைத்து சந்தனாபிஷேகம் செய்யட்டுமா? அடே! வெளியில் யாரடா ஆர்டர்லி!” என்று உரக்கக் கூவினாள்.

அதைக் கேட்ட மந்திரவாதி சாந்த குணத்தோடு புன்னகை செய்து, “ஆகா! எஜமானி அம்மாளுக்கு எவ்வளவு கோபம் வருகிறது! ஐயரை வசியம் பண்ண அறிந்த எனக்கு அம்மாளை வசியம் பண்ணத் தெரியாதா! இதோபார்; சூ! மந்திரகாளி! அடுத்த நிமிஷம் அம்மாளே ஓடிவந்து என்னைக் கட்டிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/216&oldid=1252391" இலிருந்து மீள்விக்கப்பட்டது