உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

மேனகா

குள்ளும், மணல் மேட்டிலும், ஒடித் துள்ளி விளையாடினாள்; அவர்களது வயதிலும் பத்து பத்து வருஷங்கள் குறைந்து போனதாகத் தோன்றின; அங்கு வந்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரையில் அவர்களுக்குப் பசியென்பதே தோன்ற வில்லை. இரவிலும் பகலிலும் சோலைகளில் உலாவுவதிலும், மாடியிலிருந்த மின்சார விசிறிகளைச்சுழற்றிவிட்டு அடியிலுள்ள சோபாக்களில் சாய்ந்து உல்லாசமாக இருந்து கதை பேசுவதிலும் அவர்கள் தங்களது பொழுதைப் போக்கினர்; பார்க்கு மிடமெல்லாம் பொருத்தப்பட்டிருந்த மின்சார விளக்குகளைப் பகற் பொழுதிலும் கொளுத்தி வைத்து வேடிக்கை பார்த்தனர். உட்புறத்தில் அழகாக அமைக்கப் பட்டிருந்த கட்டில்கள், சோபாக்கள், மேஜைகள், நாற்காலிகள் முதலியவற்றில் அவர்கள் உட்கார்ந்து உட்கார்ந்து சுகம் அனுபவித்தனர். சாமாவையரும் சில நாட்கள் தமது வீட்டுக்கே போகாமல் அவர்களோடிருந்து அவர்களுக்கு ஒரு விளையாட்டுக் கருவியா யமைந்து உல்லாசமாகப் பொழுதைப் போக்கினார். அவர் வெளிக்கு மாத்திரம் சந்தோஷமாக விளையாடினார் எனினும், அந்தப் பங்களாவில் இருப்பது நெருப்புத்தணலில் இருப்பது போல அவரை வருத்தியது. கடைசியாகப் பொய்ப்பத்திரம் தயாரித்துப் பதிவு செய்ததனால் அவர் அவர்களிட மிருந்து இன்னொரு ஆயிரம் ரூபாயை அபகரித்துக் கொண்டார். எவ்வாறெனில், பங்களாவை தமது பேரில் வாங்கினால் அது 9500 ரூபாய்க்குக் கிடைக்குமென்று அவர் முன்னரே சொல்லி யிருந்தார். அது இப்போது பெருந்தேவி யம்மாளின் பேரில் வாங்கப்பட்ட தாகையால், அதனால் கப்பல்கார சாய்பு இன்னொரு ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கேட்பதாகச் சொல்லி மேனகாவின் பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை விற்கச் செய்து மேலும் ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு பத்திரத்தை 10,500 ரூபாய்க்கு எழுதி முடித்தார். கப்பல்கார சாயபுவைப் போல் வேஷம் போட்ட முகம்மதியனுக்கு அந்தப் பணத்திலிருந்தே அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/235&oldid=1252411" இலிருந்து மீள்விக்கப்பட்டது