உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

259

வீட்டு சாமாவையருக்கு எழுதப்பட்டது. இரண்டாவது கடிதம், சாமாவையர், பெருந்தேவியம்மாள் ஆகிய இருவராலும் மேற்படி நைனாமுகம்மது மரைக்காயருக்கு எழுதப்பட்ட கடிதம்; இந்த இரண்டு கடிதங்களைப் படித்ததில், மேனகா என்னும் பிராமணப் பெண்ணை சாமாவையர், பெருந்தேவியம்மாள் ஆகிய இருவரும் மேற்படி நைனா முகம்மது மரைக்காயருக்கு விற்றுவிட்டு அவரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்ததாகவும், அந்தப் பெண், அந்த முகம்மதியருடைய விருப்பத்திற்கு இணங்காமல் அவருடைய மனைவியின் உதவியால் தப்பித்து வேறொரு இடத்துக்கு வந்து விட்டதாகவும், அவளை அந்த மந்திரவாதியின் உதவியால் வசியப்படுத்தித் திரும்பவும் அழைத்துக்கொண்டு மரைக்காயர் சிங்கப்பூருக்குப் போய்விட வேண்டுமென்று முயன்றதாகவும் தெரிந்தன. அந்தப் பெண் பெருந்தேவியம்மாளுக்கு மகளென்பதும், சாமாவையருக்கு சகோதரி யென்பதும் குறிக்கப்பட்டிருந்தன. அவர்களிருவரும் வெவ்வேறு ஜாதி யாராகையால், அவர்கள் குறித்த உறவு முறைமை பொய்யான தென்று நான் உடனே நிச்சயித்துக் கொண்டேன். உண்மையில் அந்தப் பெண் யாவ ளென்பதை அறிந்துகொள்ள ஒருவகையான ஆசை உதித்தது. உங்களுடைய வீட்டிற்கு அடுத்த வீடுகளில் தந்திரமாக விசாரித்து உங்கள் மனைவியின் பெயர் மேனகா வென்று அறிந்துகொண்டேன். அப்போது எனக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் தஞ்சை டிப்டி கலெக்டர் துரையினிடத்திலிருந்து எங்களுக்கு ஒரு தந்தி வந்தது. அதில் தஞ்சை டிப்டி கலெக்டரான சாம்பசிவையங்கார் என்பவர் ரஜா இல்லாமல் இந்த ஊருக்கு வந்து உங்களுடைய மனைவியான அவருடைய பெண்ணை அழைத்துக் கொண்டு போனதாகவும், அது உண்மைதானா, வென்பதை இரகசியமாக விசாரித்துத் தெரிவிக்க வேண்டு மென்று எழுதி உத்தரவு செய்திருந்தார். அன்றைக்கு மறுநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/260&oldid=1252436" இலிருந்து மீள்விக்கப்பட்டது