பக்கம்:மேனகா 2.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

275

யிருக்கலாமென்று தோன்றுகிறது. நீங்களே நேரில் போய்க் கேட்டுப்பாருங்கள்” என்றாள்.

அதைக் கேட்ட பெருந்தேவியம்மாள் மிகுந்த திகைப்பும் அச்சமு மடைந்து, ஒருக்கால் இரகசியம் வெளியா யிருக்குமோ வென்று சந்தேகித்தாள்; அவளது உடம்பு கிடுகிடென்று தானாக நடுங்கியது; என்றாலும், இரகசியம் ஒருக்காலும் வெளிவரா தென்று அவள் நினைத்து அடுத்த நிமிஷம் துணிவடைந்து, சிறிது யோசனை செய்தாள். பணிமகள் சொன்னபடி சிறிது நேரத்துக்குப் பிறகு வருவதே நல்லதென்று நினைத்து கதவைச் சாத்திக்கொண்டு கோமளத்தோடு வெளியிற் சென்றாள். பணிப்பெண் உடனே திரும்பி வராகசாமி இருந்த இடத்தை அடைந்தாள். அப்போது அவன் திரும்பவும் கண்களை மூடிக் கொண்டு துவண்டு கிடந்தான். தாயை நினைத்து உயிரழிந்து சோர்ந்து கிடக்கும் கன்றைப்போல ஏங்கி யிருந்த வராகசாமியின் முகத்தை, அந்த மடந்தை இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டே நெருங்கி நின்றாள். அவ்வாறு நெடுநேரம் கழிய அவன் விழித்துக் கொண்டான். அவனது முகம் விகாரப் பட்டுத் தோன்றி அவனது மனதிற்குள் நடக்கும் பெரும் போரைத் தெள்ளிதில் காட்டியது; களைப்பும், துக்கமும், ஆத்திரமும் வந்து மூடிக்கொண்ட அவன் முதல் நாளே உணவருந்தினவனாதலின் பெண்மணி அவனை நோக்கி, “நிரம்பவும் களைப்பாக இருக்கிறதே! சாப்பிடுகிறீர்களா?” என்று மெல்லக் கேட்டாள். அவன் மிகவும் வெறுப்பாக, “ஆம்; பெண்டாட்டியைத் தின்ற சண்டாளனுக்குச் சாப்பாடு வேண்டுமா? நான் இனிமேல் இந்த உடம்பை வளர்த்து உலகில் வாழவும் வேண்டுமா? எனக்கு ஆகாரமும் வேண்டாம்; மருந்தும் வேண்டாம்; பேசாமல் விட்டு விடுங்கள். உங்களுடைய வைத்திய சாலையில் விஷமிருந்தால் சிறிதளவு வாங்கிக் கொடுப்பாயானால் ஒரு நிமிஷத்தில் என்னுடைய துன்பங்களையும், உங்களுடைய சிரமத்தையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/276&oldid=1252452" இலிருந்து மீள்விக்கப்பட்டது