உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

மேனகா

மேனகா மேலே படிக்கிறாள்:- “நான் உடனே வீட்டுக்குப் போய், விஷயங்களையெல்லாம், என் சம்சாரம், பெண் ஆகிய இருவரிடமும் தெரிவிக்க, அவர்களும் நானும் பெரிதும் சந்தோஷம் அடைந்தோம். எஜமானியம்மாளுக்கு உடனே ஆபரேஷன் நடைபெறு மென்றும், அவர்கள் பிழைத்துக் கொள்வார்க ளென்றும் நினைத்துக் கொண்டோம். போலீஸாரும் எஜமானரை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்களென்ற ஒரு துணிவும் என் மனதில் உண்டாயிற்று.

அதன் பிறகு நான், நம்முடைய எஜமானரை என்ன குற்றத்திற்காக துரைத்தனத்தார் வேலையிலிருந்து நீக்கினார்க ளென்பதைப் பற்றி நன்றாக விசாரணை செய்யத் தொடங்கினேன். எஜமானர் உத்தரவில்லாமல் இரண்டு தடவை பட்டணத்துக்கு வந்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். அவற்றில் முதல் தடவை அம்பாள் சத்திரத்தில் எஜமானர் முகாம் செய்திருந்த போது நானும் கூட இருந்தேனா கையால், அன்று அவர் பட்டணத்துக்குப் போனதாகச் சொன்னது அபாண்டமான கட்டுப்பாடென்பது நிச்சயமாயிற்று. நான் உடனே புறப்பட்டு அம்பாள் சத்திரத்துக்குப் போனேன். எஜமானர் அன்றைய தினம் அவ்வூர் கிராம முன்சீப்பு, கர்ணம் முதலியோரிடமுள்ள கணக்குகளிலும் அவ்வூர் தரும சத்திரத்திலுள்ள கணக்குகளிலும் கையெழுத்துச் செய்து தேதியும் போட்டிருந்தார். தவிர, அன்று போலீசாரால் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் செய்யப்பட்ட ஒரு திருடனைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கும்படி ரிமாண்டு உத்தரவும் கொடுத்திருந்தார். அத்தனை விவரங்களையும் சந்தேகமற அறிந்து கொண்டு திரும்பி தஞ்சாவூருக்கு வந்தேன்.

எஜமானர் இரண்டாவது தடவை, பட்டணத்துக்கு வந்தது உண்மையே. ஆனால், அதற்குமுன் பெரிய கலெக்டர் ரஜா கொடுத்திருப்பதாக தாதில்தார் தாந்தோனிராயர் சேவகப் பக்கிரியின் மூலமாகச் செய்தி சொல்லி யனுப்பியதை, நானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/313&oldid=1252489" இலிருந்து மீள்விக்கப்பட்டது