உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

313

நம்முடைய வீட்டிலிருந்த பல சேவகர்களும், தாசில்தார் விட்டிலிருந்த சேவகர்களும் அறிந்தோம். நான் மற்ற சேவகர்களை ஒன்றாய்க் கூட்டிக் கொண்டு பக்கிரியிடம் போனேன்; அநியாயமாகப் பொய்சொல்லி ஒரு பெருத்த அதிகாரியைக் கெடுத்துவிட்டதைப்பற்றி அவனை நாங்கள் எல்லோரும் தூவித்தோம்; அவன்; தான் தாசில்தாரின் உத்தரவின்மேல் அப்படிச் சொன்னதாயும், அவ்வாறே பெரிய கலெக்டரிடத்திலும் சொல்லத்தயாராக இருப்பதாகவும் ஒப்புக் கொண்டான். மற்ற சேவகர்களும் எஜமானரிடம் பக்கிரி வந்து சொன்னது தமக்குத் தெரியுமென்று பெரிய கலெக்டரிடம் சொல்ல இணங்கினார்கள். உடனே நான், இந்த விவரங்களை யெல்லாம் குறித்து, பெரிய கலெக்டருக்கு உடனே ஒரு மனு எழுதி அதைக் கையிலெடுத்துக் கொண்டு போய் துரையைக் கண்டு அவரிடம் அதைக் கொடுத்தேன்; முதலில் அவர் என் சொல்லை நம்பாமல் என்மீது சீறி விழுந்தார். கடிதத்திற் கண்ட விஷயங்களை நான் திருப்திகரமாக ருஜுப்படுத்துகிறே னென்று விடாமல் மேன்மேலும் வற்புறுத்திச் சொன்ன பிறகு, அவர் நம்பிக்கை கொண்டவராய் அன்றைய தினமே புறப்பட்டு அம்பாள் சத்திரத்துக்குப் போனார்; கணக்குகளைச் சோதனை செய்தார்; டிப்டி கலெக்டர் உண்மையில் அன்றைய தினம் அங்கு வந்திருந்தார் என்பதைச் சந்தேகமற அறிந்து கொண்டார்; உடனே தஞ்சாவூருக்கு வந்தார்; பக்கிரி முதலிய சேவகர்களை விசாரித்தார்; எஜமானரின் மேல் தாசில்தார் பெரும் பகை கொண்டவரென்பதையும் தாம் ரஜா கொடுத்துவிட்டதாக தாசில்தார் பக்கிரியின் மூலமாகப் பொய் சொல்லி அனுப்பினார் என்பதையும் உணர்ந்து கொண்டார் எஜமானர் விஷயத்தில் தாம் பெருத்த தவறையும் கொடுமையையும் செய்துவிட்டதைக் கண்டுகொண்ட கலெக்டர் துரை மிகவும் இரக்கங்கொண்டு மனநொந்து விசனித்து வருந்தினார். அதனால் தமக்கு எவ்விதமாக தீங்கு வரினும் வரட்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/314&oldid=1252490" இலிருந்து மீள்விக்கப்பட்டது