உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மேனகா 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

33

அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார். உடனே இடியாப்பக்காரியை நோக்கி, "ஏ கிழவி! நீ இந்த ஐந்நூறு காசுக்கு இவ்வளவு யோசனை செய்கிறாயே! இவர்களைப் பார்த்தாயா? இவர்கள் யார் தெரியுமா?” என்றார். கிழவி திகைப்படைந்து சாமாவையரைப் பார்த்தாள். “இவர்கள் கீழ்ப்பாதி மங்கலம் மைனர். இவர்களுக்கு 549 வேலி நிலம் இருக்கிறது. லெட்சலெட்சமாய்ப் பணத்தை எங்கள் கம்பெனியில் வட்டிக்குப் போட்டிருக்கிறார்கள். இவர்கள் கூட தஸ்தாவேஜூ கேட்கவில்லையே! இந்தா நான் முடிவாகச் சொல்லுகிறேன்; உனக்குத் தைரியமிருந்தால் கொடுத்து விட்டுப்போ, இல்லாவிட்டால் எடுத்துக்கொண்டு போ. நான் இவர்களுடன் பேசவேண்டும்” என்று உறுதியாக மொழிந்தார்.

கிழவி திகைப்பும் குழப்பமுமடைந்து தயங்கி நின்றாள். உடனே சாமாவையர், “பாட்டி! இந்த இடத்தில் பணம் கொடுத்தால் பயமே இல்லை. இவர்களுடைய சொல்லே போதுமானது; பத்திரம் எதற்கு? சாட்சி எதற்கு? ஒன்றும் தேவையில்லை. இதோ பார் நான் இருபதினாயிரம் ரூபா கொணர்ந்திருக்கிறேன். பத்திரமில்லாமலே கொடுக்க போகிறேன்” என்று தமது ரயில்வே பாக்கை (தோல் பையை)த் திறந்து அதிலிருந்த ஒரு பெருத்த துணி மூட்டையை அவிழ்த்துக் காட்டினார். அம்மூட்டை முழுவதிலும் பவுன்களே நிறைந்து கண்ணைப் பறித்தன. அதைக் கண்ட கிழவி வாயைப் பிளந்தாள், வரதாச்சாரியும் திகைத்தார்; ஆனால், அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கிழவியின் மனதில் உடனே பெருத்த நம்பிக்கை பிறந்தது. தனது கந்தைத் துணி மூட்டையை அவிழ்த்து, ரூபா ஐந்நூறையும் கலகலவென்று வரதாச்சாரியின் முன்னர் கொட்டிவிட்டு, போதாதற்கு அவரையும் சாமாவை யரையும் வணங்கி நமஸ்காரம் செய்துவிட்டு விடை பெற்றுக் கொண்டு வெளியில் நடந்தாள். வஞ்சகரிருவரும் தமது வெற்றியை நினைத்து மகிழ்வடைந்து ஒருவரையொருவர்

மே.கா.II-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/35&oldid=1251848" இலிருந்து மீள்விக்கப்பட்டது